உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுனிதாவுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

சுனிதாவுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

திமர்பூர்,:சிவசேனா உத்தவ் பாலசாகேப் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குச் சென்று, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலைச் சந்தித்தார்.மகாராஷ்டிர முன்னாள் முதல்வருடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோரும் சென்றிருந்தனர்.இந்த சந்திப்பின்போது ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள் சஞ்சய் சிங், ராகவ் சதா ஆகியோரும் உடனிருந்தனர்.அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உத்தவ் பாலசாகேப் தாக்கரே கட்சி ஆகியவை, இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இண்டியா கூட்டணித் தலைவர்களைச் சந்தித்து, அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.இதற்காக அவர் தேசிய தலைநகரில் முகாமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivagiri
ஆக 09, 2024 12:30

இப்போ - அரசியல் என்பது மக்களை சந்திப்பது கிடையாது - - மக்களை எப்படியெல்லாம் ஏமாத்தி, பொய்யும் புரட்டும் பரப்பி விட்டு, கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு, மக்களை பல்வேறு வகைகளில் கவனத்தை திசை திருப்பி - மக்களை சிதறடித்து, பின் க்ரூப்பாக சேர்ந்து அள்ளிக்கொள்வது - அதாவது கலைஞர் கருணாநிதி பாணி என்னவென்றால் - குட்டையை குழப்பி மீன் பிடிப்பது . . மீன் பிடிக்கும்போது மீன் சாப்பிடாதவர்களை கூட்டாக சேர்த்துக் கொள்ள வேண்டும் - - ? . .


Mohan
ஆக 09, 2024 12:29

மிகவும் கெத்தாக கட்சி நடத்திய பாலாசாஹேப்தாக்கரேஜியின் சந்திப்புக்காக காத்திருந்த பெருந்தலைகள் எத்தனை?. பெருமை இழந்து கீழிறங்கி சாதாரண மாநிலக்கட்சியின் ஊழல் தலைவனின் வீடு தேடி சென்று சந்தித்ததனால் தன் தகப்பனின் பெருமை அனைத்தையும் இழந்து சாதாரண கட்சி தலைவனாகியுள்ள உத்தவ் தாக்கரே இண்டி கூட்டணியால் இனி இழப்புகளை மட்டுமே பரிசாக பெறுவார். ஹூம் நேரம்


Anand
ஆக 09, 2024 11:16

எவ்வளவு கெத்தாக இருந்தார் பால் தாக்கரே, ஆனால் இவரோட மகனோ சேராத இடம் சேர்ந்து மிகவும் கேவலப்பட்டு போனான்.


HoneyBee
ஆக 09, 2024 08:31

தாக்கரே குடும்பம் இந்த அளவுக்கு கேவலமாக ஆயிடுச்சு.. பாவம்


Subramanian
ஆக 09, 2024 04:32

What a fall. When they were in BJP alliance BJP leaders would come and discuss at Matoshree. Now he has to go and meet every small opposition leader also at Delhi.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி