உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யு.ஜி.சி. ‛நெட் தேர்வு முறைகேடு : விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

யு.ஜி.சி. ‛நெட் தேர்வு முறைகேடு : விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

புதுடில்லி: யு.ஜி.சி., நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று சி.பி.ஐ. விசாரணையை துவக்கியுள்ளது.நாட்டின் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்க, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி., நெட் தேர்வு நாடு முழுதும் கடந்த 18-ம் தேதி நடந்தது. ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் யு.ஜி.சி. ‛நெட்' தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இந்த விவகாரத்தி்ல் நடந்துள்ள முறைகேடு குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ., இன்று எப்.ஐ.ஆர்., வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R Kay
ஜூன் 21, 2024 03:00

பொங்கும் நிறைய பேருக்கும் நீட்டிற்கோ, நெட்டிற்கோ சம்பந்தமே இருக்காது. அதுகுறித்து எந்த புரிதலுமிருக்காது. எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்க துடிக்கும் சந்தர்ப்பவாத சுயநல கொள்ளைக்கூட்டம் எங்கு தவறு நிகழ்ந்தாலும் தன்வசம் உள்ள குன்றிய மீடியா மூலம் மத்திய அரசுக்கு இழிவு தேடிதர முயலும். சிபிஐ குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.


S BASKAR
ஜூன் 20, 2024 22:02

நெட்டுக்கு முன்பே நீட் முறைகேடு வந்தும்... அது பற்றி சிபிஐ விசாரணை இல்லையே


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை