உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான்காம் கட்டமாக 12 இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

நான்காம் கட்டமாக 12 இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

புதுடில்லி: சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்தின்படி, நான்காம் கட்டமாக, 12 இந்தியர்கள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள், புதுடில்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு துவக்கியது. இதன்படி இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த, சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது. இந்த திட்டத்தின்படி, முதல் கட்டமாக, 104 பேர், இரண்டாம் கட்டமாக 116 பேர், மூன்றாம் கட்டமாக, 112 பேர் ஏற்கனவே நம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானங்கள் அனைத்தும் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு வந்தன. இதில், பெரும்பாலானோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். அதற்கடுத்து ஹரியானா, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தனர்.இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கிஉள்ளவர்களை, மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. அங்கு விசாரணைக்குப் பின், அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, சமீபத்தில், 300 பேர் பனாமாவில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். கட்டாயப்படுத்தி, ஹோட்டலுக்குள் அடைத்து வைக்கப்பட்டுஉள்ளதாக அங்கிருந்தோர் புகார் கூறியிருந்தனர். இதில், பெரும்பாலானோர் சொந்த நாட்டுக்கு திரும்ப மறுத்தனர்.இந்நிலையில், பனாமாவில் இருந்து, 12 இந்தியர்கள் டில்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்து சேர்ந்தனர். இவர்களில், நான்கு பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இதுவரை நான்கு கட்டங்களாக, இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
பிப் 24, 2025 16:07

போதிய விளம்பரம் கிடைச்சாச்சு.


விதேஷ்சிங்
பிப் 24, 2025 16:05

இனிமே ராணுவ விமானத்தில் அனுப்பி கட்டுப் படியாகாது. பயணிகள் விமானத்தில் கட்டி அனுப்பிச்சிருவாங்க.


ஆரூர் ரங்
பிப் 24, 2025 11:00

இப்படியே ஏழரை லட்சம் பேரையும் 100 ஆண்டுகளில் திருப்பியனுப்ப திட்டமா?. சிரிச்சு சிரிச்சு..


சண்முகம்
பிப் 24, 2025 10:57

340 பேரை விளம்பரத்தோடு அனுப்பியாச்சு. இன்னும் 724,660 பேர் தான் பாக்கி.


user name
பிப் 24, 2025 10:49

நம்ம ஜி வருடத்திற்கு ஒருகோடி பேருக்கு வேலை குடுத்துமா இவர்கள் கள்ளத்தனமாக அமெரிக்கா போனார்கள்


தம்பி
பிப் 24, 2025 08:32

பாக்கி பேர் எங்கே? அமெரிக்காவுலேயே பதுங்கிட்டாங்களா?


naranan
பிப் 24, 2025 08:31

தயவு செய்து எலான் மஸ்கு மூலம் இந்தக் கள்ளக் குடியேறிகளை வேற்று கிரகங்களுக்கு அனுப்பி வைக்கவும்.


Kasimani Baskaran
பிப் 24, 2025 07:15

கள்ளக்குடியேறிகளை இந்தியாவும் இதே பாணியில் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


Muralidharan raghavan
பிப் 24, 2025 10:41

கரெக்ட்


தாமரை மலர்கிறது
பிப் 24, 2025 02:00

கிட்டத்தட்ட ஐந்து லட்சம் இந்திய கள்ளக்குடியேறிகள் அமெரிக்காவில் உள்ளார்கள். இப்படி பன்னிரண்டு பேராக அனுப்பிக்கொண்டிருந்தால், ஒரு நூற்றாண்டு ஆகும். ஐந்து கப்பலில் மொட்டை போட்டு ஐம்பதாயிரம் பேரை ஒரே நேரத்தில் அனுப்பி வையுங்கள்.


Barakat Ali
பிப் 24, 2025 10:05

கப்பலையே நாறடிச்சுருவாய்ங்க பாசு ....


முக்கிய வீடியோ