மேலும் செய்திகள்
இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்
2 hour(s) ago | 9
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
5 hour(s) ago
புதுடில்லி: லோக்சபா செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பார்லிமென்ட் பொது கணக்கு குழுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் தலைவராக இருப்பார். ஓ.பி.சி., நலன் தொடர்பான கமிட்டிக்கு பா.ஜ.,வின் கணேஷ் சிங் தலைவராக இருப்பார். எஸ்.சி., - எஸ்.டி., நலக் குழுவின் தலைவராக, அதே கட்சியைச் சேர்ந்த பக்கன் சிங் குலாஸ்தே தலைமை வகிப்பார். மதிப்பீடுகளுக்கான குழுவின் தலைவராக பா.ஜ.,வின் சஞ்சஸ் ஜெய்ஸ்வால், பொது நிறுவனங்களுக்கான குழுவின் தலைவராக பா.ஜ.,வைச் சேர்ந்த பைஜயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொது கணக்கு குழு, பொது நிறுவனங்களுக்கான குழு மற்றும் மதிப்பீட்டு குழு ஆகியவை பார்லிமென்டில் முக்கியமான குழுக்களாக கருதப்படுகின்றன. இந்த குழுக்களின் பதவிக் காலம் ஓராண்டு.
2 hour(s) ago | 9
5 hour(s) ago