உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எய்ம்ஸ் மருத்துவமனையில் துணை ஜனாதிபதி அட்மிட்

எய்ம்ஸ் மருத்துவமனையில் துணை ஜனாதிபதி அட்மிட்

புதுடில்லி: துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு, 73, நேற்று அதிகாலை 2:00 மணி அளவில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் இதயவியல் துறை தலைவர் டாக்டர் ராஜிவ் நரங்க் தலைமையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நேற்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி