உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி: அனுராக் தாக்கூர் பேட்டி

பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி: அனுராக் தாக்கூர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: 'பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி, பா.ஜ., 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது' என பா.ஜ., எம்.பி அனுராக் தாக்கூர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.ஹிமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் ஹமிர்பூர் தொகுதி எம்.பி., அனுராக் தாக்கூர் தலைமையில் பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: மத்திய அமைச்சராக நட்டாவுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகள் குறித்து பார்லிமென்டில் தொடர்ந்து குரல் எழுப்புவோம். பா.ஜ.,வினரின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது.

100 சதவீதம்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி, பா.ஜ., 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. 4 லோக்சபா எம்.பி.க்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்.பி.,கள் உள்ளனர். எம்.பி.,யாக இருக்க எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். 3 முதல் 5 வருடங்களுக்கு ஒவ்வொருவருக்கும் புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

veeramani
ஜூன் 12, 2024 18:42

தாமரையின் இளைஞர்களின் முடிசூடா மன்னன் அனுராக் தாக்குர் .. நிதி துறையின் துணை அமைச்சர் பின்னர் விளையாட்டு துறையின் அமைச்சர். அனைத்திலும் அவரது செயல்பாடுகள் மிக மிக அருமை. கட்சியில் பொறுப்பு எதிர்பார்க்கிறோம் . இல்லாவிடின் துணை சபாநாயகர்


Velan Iyengaar
ஜூன் 12, 2024 17:38

இதுக்கு பெயர் வெற்றியா ??? .. 4ஆம் கட்ட தேர்தலிலேயே எங்களுக்கு 350 கிடைத்துவிட்டது


Rajagopalan R
ஜூன் 12, 2024 16:14

. பள்ளி நாட்களில் என் ஆசிரியர் இரண்டை சொல்லுவார் இரண்டு பூனை ஒரு குரங்கு ஆப்பம் சண்டை


Rajagopalan R
ஜூன் 12, 2024 16:09

இன்றைய பெஸ்ட் ஜோக்


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 16:05

தொடர்ந்து மூன்று முறை என்பதே தேசீய சாதனைதான். நேரு பெற்றது கூட எதிர்க்கட்சிகள் பெரிதாக வளராத நிலையில் டிவி, ரேடியோவை அரசின் ஏகபோகமாக வைத்துக் கொண்டு பெற்ற வெற்றிதான். பத்தாண்டுகளுக்கு பின்னும் அரசின் மீது ANTI INCUMBENCY அலுப்புணர்வு மிகவும் குறைவாகவே உருவாகியுள்ளது. இது மிக மிக அபூர்வம்.


தமிழ்
ஜூன் 12, 2024 18:20

.. காசா பணமா அடிச்சி வுடுங்கள்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ