உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை பள்ளத்தால் இடிந்ததா மசூதி?

சாலை பள்ளத்தால் இடிந்ததா மசூதி?

ஹவுஸ் காசி : பழைய டில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் உள்ள பழைய மசூதி ஒன்று, சாலை பள்ளத்தால் இடிந்து விழுந்ததாக புகார் எழுந்துள்ளது.ஹவுஸ் காசி பகுதியில் சுடிவாலா என்ற இடத்தில் பழைய மசூதி ஒன்று உள்ளது. நேற்று பிற்பகல் 1:00 மணி அளவில் மசூதியின் முன்பக்க சுவரில் பெரிய பெரிய விரிசல் ஏற்பட்டது.இதுபற்றி உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், உடனடியாக மசூதியில் இருந்த அனைவரையும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.அனைவரும் வெளியேற்றப்பட்ட சில நிமிடங்களில் மசூதியின் முன்பகுதி இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டதே மசூதி இடிந்து விழுவதற்கு காரணமென, அப்பகுதியினர் கூறினர். இதை டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மறுத்துள்ளது. மாநகராட்சியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பலவீனமான அடித்தளத்தால் மசூதி இடிந்து விழுந்தது. இப்பகுதியில் சாலை பள்ளங்கள் எதுவும் இல்லை' என, கூறினார்.எனினும், 'சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்' என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை