உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்

மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்

துமகூரு : ''பல்லாரி, துமகூரு, சித்ரதுர்கா மாவட்டங்களுக்கு விரைவில் குடிநீர் வினியோகிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன,'' என, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.துமகூரின், பாவகடா குவாதிகுன்டே அருகில் நடக்கும் பணிகளை, அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று பார்வையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி:துங்கபத்ரா அணையில் இருந்து சித்ரதுர்கா, பல்லாரி, துமகூரு ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும். மூன்று மாவட்டங்களின், 1,138 கிராமங்கள், இரண்டு நகரங்களின் 17.21 லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும்.சிலவனகட்டி, கூட்லகி, மொலகாள்மூரு, துருவனுார், பாவகடாவில் நடக்கும் திட்டப்பணிகள், 95 சதவீதம் முடிந்துள்ளது. குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின் இணைப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது.கடந்த ஆண்டு 2,132.02 கோடி ரூபாய் செலவில் பணிகள் துவங்கி விரைந்து முடிக்கப்பட்டன. நடப்பாண்டு மே வரை 1,852.15 கோடி ரூபாய் செலவானது. குடிநீர் சுத்திகரிப்பு யூனிட் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 11, 2024 06:50

பாஜக அரசு முன்னெடுத்த திட்டம் இது , இப்போது முடிவடையும் தருணத்தில் இருக்கு வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை