உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டணிக்காக தியாகம் செய்துள்ளோம் : உமர் அப்துல்லா ஆதங்கம்

கூட்டணிக்காக தியாகம் செய்துள்ளோம் : உமர் அப்துல்லா ஆதங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதியை கொடுத்து தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் சட்டபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா பேசியுள்ளார்.90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டபைக்கு செப்.18, செப். 25, அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலில் பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு செய்துள்ளது. இதன்படி தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்., 32 இடங்களிலும் போட்டியிடுகிறது.இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஸ்ரீநகர் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது,வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தவே, காங்.குடன் கூட்டணி வைத்துள்ளோம். இங்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் தன் கட்சிக்காக பிரசாரம் செய்ய போவதில்லை என தெரிவித்துள்ளார். எனவே இழந்த உரிமைகளை மீட்க தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அவசியம் என்பதை உணர்ந்து காங்கிரசுடன் கை கோர்க்க வேண்டியதாயிற்று. கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டு கொடுத்து தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக சில கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
ஆக 31, 2024 10:00

கூட்டணிக்காக தியாகம் செய்து இருக்கிறோம்..... ஆனால் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை.... அப்படி தானே ???


பேசும் தமிழன்
ஆக 31, 2024 09:59

இன்னும் ஒரே ஒரு தியாகம் செய்யுங்கள்..... இந்த நாட்டை விட்டு ஓடி விடுங்கள்.... நீங்களும் உங்கள் குடும்பமும்.... எங்கள் நாடு அமைதியாக இருக்கும்.


Subburamu K
ஆக 31, 2024 06:58

it is not a sacrifice, but a business to gain power and looting public wealth


Sathyan
ஆக 31, 2024 04:37

இந்திய நாட்டுக்கு தேசத்துரோகம் செய்யும் அனைவரையும் சுட்டுத்தள்ளவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை