உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுரங்கத்தில் சிக்கிய 8 பேர் சகதிக்குள் புதைந்தனரா? விபத்து பகுதியை நெருங்கியது மீட்பு படை

சுரங்கத்தில் சிக்கிய 8 பேர் சகதிக்குள் புதைந்தனரா? விபத்து பகுதியை நெருங்கியது மீட்பு படை

நாகர்கர்னுால்: தெலுங்கானாவில் அணை சுரங்கத்தில் சிக்கிய எட்டு பேரும் இருக்கும் இடத்தை, ஐந்து நாட்களுக்கு பின், மீட்புப் படையினர் நேற்று சென்றடைந்தனர். தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ynww1b6z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்குள்ள நாகர்கர்னுால் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து, 4 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் கீழ், 44 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் அமைக்கப்படுகிறது. பிப்., 22ல் திடீரென சுரங்க மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டதால், 40க்கும் மேற்பட்டோர் தப்பிய நிலையில், இரண்டு இன்ஜினியர்கள் உட்பட எட்டு பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.கடும் முயற்சிஇதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், எலி வளை சுரங்க நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் அடங்கிய குழுவினர், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், நீர்க்கசிவு, இடிபாடுகள், மண் போன்றவற்றால் மீட்புப் பணியில் சவால் ஏற்பட்டது. 30 அடி உயரம் கொண்ட சுரங்கத்தில் 25 அடி வரை சகதி நிரம்பி கிடந்தது. இதையடுத்து, மீட்புப் படையினர் தண்ணீரை அகற்றி சுரங்கத்துக்குள் முன்னேறினர். கடந்த ஐந்து நாட்கள் நீடித்த கடும் முயற்சிக்கு பின், சுரங்கம் இடிந்து விழுந்த இடத்தை, 20 பேர் அடங்கிய மீட்புக் குழுவினர் நேற்று சென்றடைந்தனர். ஆனால், சகதி இறுகி கிடப்பதால், எட்டு பேரும் எங்கு சிக்கியுள்ளனர் என்பதை மிகச் சரியாக கண்டுபிடிக்க மோப்ப நாய் அழைத்து வரப்பட்டுள்ளது. இறுகி கிடக்கும் சகதியை உடைக்கும் பணியும் நடைபெறுகிறது.வாய்ப்பு குறைவுதெலுங்கானா துணை முதல்வர் விக்ரமார்கா, நீர்வளத்துறை அமைச்சர் உத்தம் குமார் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள், கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு, மீட்புப் பணியை கண்காணித்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய எட்டு பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என, கூறப்படுகிறது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட விரிசல்களின் அளவு, நீரின் செறிவுத் தன்மை போன்றவற்றை மதிப்பிடுவதற்காக, தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வாயிலாக ஆய்வு நடத்தும்படி மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கடிதம் எழுதியுள்ளது.மேலும், மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய புவி இயற்பியல் ஆய்வு மையத்தினரும், மண் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை