உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் எதிர்பார்ப்பது என்ன? பா.ஜ., விஸ்வநாத் கருத்து!

மக்கள் எதிர்பார்ப்பது என்ன? பா.ஜ., விஸ்வநாத் கருத்து!

மைசூரு: ''ராமர் பிறந்த இடமான அயோத்தியில், பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் தேவை என்பதை, மக்கள் நிரூபித்துள்ளனர்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:'காந்தி யார் என்றே மக்களுக்கு தெரியவில்லை' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்க கூடாது. சூரியன், சந்திரன் இருக்கும் வரை, காந்தியின் பெயரும் நிலையாக இருக்கும்.ராமர் பிறந்த இடமான அயோத்தியில், பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் தேவை என்பதை, மக்கள் நிரூபித்துள்ளனர்.யது வம்சத்தை சேர்ந்த யதுவீருக்கு எதிராக, மைசூரில் வேட்பாளரை களமிறக்க வேண்டாம் என, காங்கிரசிடம் நான் கூறினேன். ஆனால் அந்த கட்சி தலைவர்கள் பொருட்படுத்தவில்லை. ஒக்கலிகரை களமிறக்குவோம், லிங்காயத்தை களமிறக்குவோம் என்றனர். மஹாராஜாவுக்கு எந்த ஜாதியும் இல்லை. 12 நாட்கள் முதல்வர், மைசூரில் தங்கியிருந்தார். ஆனால், முடிவு என்ன ஆனது.முதல்வரின் அகங்காரத்தால், எதையும் செய்ய முடியாது. 136 தொகுதிகளை கைப்பற்றியும், வாக்குறுதி திட்டங்களை பயன்படுத்தியும் என்ன பயன். அரசின் நடவடிக்கையை மக்கள் கவனிக்கின்றனர். மற்றவரை ஏக வசனத்தில் பேசுவதை, முதல்வர் விட்டு விட வேண்டும்.யதுவீருக்கு அதிக பொறுப்பு வந்துள்ளது. மைசூரில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். உலக பிரசித்தி பெற்ற தசரா திருவிழா மந்தமாகியுள்ளது. இதை உலக பிரசித்தியாக்க வேண்டும். எந்த அலையாலும் யதுவீர் வெற்றி பெறவில்லை. மக்களின் அலையால் வெற்றி பெற்றார். மன்னர்களின் பங்களிப்பை நினைவு கூரவேண்டும்.ஒரு தொகுதியில் இருந்து, ஒன்பது தொகுதிக்கு வந்து விட்டதாக காங்கிரசார் கூறுகின்றனர். 28க்கு 28லும் வெற்றி பெறுவதாக கூறினர். ஏன் வெற்றி பெறவில்லை. மைசூரில் காங்கிரசின் தோல்வி, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காண்பித்துள்ளது.கர்நாடகாவின் 28 எம்.பி.,க்களும், கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும். கடந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள், நம் மாநிலத்தின் பிரச்னைகள் குறித்து, கேள்வி எழுப்பவில்லை. நாங்கள் பதவியில் இருந்த போது, ஒற்றுமையாக பணியாற்றுகிறோம். சமீப ஆண்டுகளில் இந்த ஒற்றுமை இல்லை.இம்முறை தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள், அப்படி இருக்க கூடாது. மூன்று முன்னாள் முதல்வர்கள், லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநிலத்தின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை