உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவீன் பட்நாயக்குக்கு என்ன ஆச்சு? பிரசாரத்தில் பிரதமர் மோடி கேள்வி

நவீன் பட்நாயக்குக்கு என்ன ஆச்சு? பிரசாரத்தில் பிரதமர் மோடி கேள்வி

பரிபாதா :“ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததன் பின்னணியில் சதி உள்ளதா?” என ஒடிசாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி சந்தேகம் எழுப்பினார்.ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு லோக்சபா மற்றும் சட்டசபைக்கு ஒன்றாக தேர்தல் நடக்கிறது. ஆளும் பிஜு ஜனதா தளம் மற்றும் பா.ஜ., இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில், நாளை மறுநாள் ஒடிசாவில் கடைசி கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக பரிபாதாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார்.அதில், அவர் பேசியதாவது: ஒடிசா மக்கள் 25 ஆண்டுகால பிஜு ஜனதா தள ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துவிட்டனர். ஒட்டுமொத்த ஒடிசாவும், ஒடிசாகாரரை தான் முதல்வராக்க விரும்புகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை, திடீரென மோசமடைந்துள்ளது. இதன் பின்னணியில் சதி உள்ளதா? அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்கு, அவர் சார்பாக தற்போது அரசை நடத்தும் லாபி காரணமா?சட்டசபை தேர்தலுக்குப் பின் ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய, குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.முதல்வர் நவீன் பட்நாயக் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, அவர் கைகள் நடுங்கின. அதை மறைக்கும் வகையில், முதல்வருக்கு நெருக்கமானவரும், கேபினட் அந்தஸ்தில் இருப்பவருமான, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டியன் அவர் கையை நகர்த்தி வைத்தார்.இந்த வீடியோவை பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, நவீன் பட்நாயக் முழுக்க முழுக்க பாண்டியனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக விமர்சித்தனர். மோடியின் பேச்சுக்கு பதில் அளித்த முதல்வர் நவீன் பட்நாயக், ''என் உடல்நிலை மீது மோடிக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், என்னை தொலைபேசியில் அழைத்து விசாரித்து இருக்கலாமே. அதை விடுத்து அவரது கட்சியினர் சொல்வதை நம்பி இப்படி பேசலாமா?'' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ