உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் இலக்கு என்ன?

மோடியின் இலக்கு என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்த முறை, 400 தொகுதிகளில் வெற்றி என மோடியும், பா.ஜ.,வினரும் கூறி வருகின்றனர். இது சாத்தியமா என்பது சந்தேகமாக உள்ளது. இருப்பினும், இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் மோடி.ஒரு லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் அடக்கம். பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மோடி ஒரு உத்தரவிட்டுள்ளார். 'ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் அவர்கள் தொகுதிகளிலிருந்து அதிகபட்ச ஓட்டுகளை பா.ஜ., கூட்டணி எம்.பி., வேட்பாளருக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். அப்படி ஒத்துழைத்தால் தான், மத்தியில் நாம் ஆட்சி அமைக்க முடியும்' என, கட்டளையிட்டுள்ளாராம் மோடி.இதனால், சில மாநிலங்களில் உள்ள கோஷ்டி பூசல்களை, ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது மோடியின் திட்டம். 'மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளான, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்., ஆகிய கட்சிகளுக்கும், பா.ஜ.,விற்கும் இடையே சில பிரச்னைகள் உள்ளன. மோடியின் இந்த உத்தரவால் மஹாராஷ்டிரா கூட்டணிக்கு களத்தில் பிரச்னை இருக்காது' என்கின்றனர். இந்த மாநிலத்தில், 48 தொகுதிகள் உள்ளன; 40ல் வெற்றி என்பது மோடியின் இலக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கதிர்வேல்
ஏப் 21, 2024 10:01

முதலில் பாஞ்சி லட்சம் போட்டாரு. ரெண்டு கோடி வேலையும் குடுத்தாரு. அடுத்த தடவை எல்லோருக்கும் வூடு கட்டி குடுத்தாரு. இந்த முறை ஜெயிச்சா ஆளுக்கு ஒரு காரோ கப்பலோ குடுப்பாருன்னு நம்பறேன். என்னோட ஓட்டு தாமரைக்கே போட்டேன்.


venugopal s
ஏப் 21, 2024 09:10

பிரதமர் மோடி அவர்கள் பிரசாரம் செய்தால் மக்கள் உடனே பாஜகவுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட வேண்டாம்!


Duruvesan
ஏப் 21, 2024 16:52

விடியல் கேரளா ல பிரச்சாரம் பண்ணினால் ராவுலு செய்யிப்பாரு


VENKATASUBRAMANIAN
ஏப் 21, 2024 08:30

காங்கிரஸ் திமுக ஜெயித்தால் ஈவிஎம் ஓகே பாஜக ஜெயித்தால் மட்டுமே ஈவிஎம் மீது சாக்கு சொல்வார்கள் கேவலமான பிறவிகள்


பல்லவி
ஏப் 21, 2024 06:46

இ வி எம் இருக்க பயமேன்


Duruvesan
ஏப் 21, 2024 16:52

கரெக்ட் பாய் விடியளு செயிச்சது அப்படி தான்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ