உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுரங்கத்தில் சிக்கிய 8 பேரின் கதி என்ன? சகதியால் சவாலாகும் மீட்பு பணி

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரின் கதி என்ன? சகதியால் சவாலாகும் மீட்பு பணி

நாகர் கர்னுால், பிப். 24---தெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், அதில் சிக்கிய எட்டு தொழிலாளர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r6wminjw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தெலுங்கானாவின் நாகர் கர்னுால் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து, நல்கொண்டா மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி, குடிநீர் தேவைக்காக, 'ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் கீழ் 44 கி.மீ., துார சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த திட்டத்தில், இன்னும் 9 கி.மீ., தொலைவுக்கு பாதை அமைக்க வேண்டும். நேற்று முன்தினம் இதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, சுரங்கத்தின் மேல் பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், 70க்கும் மேற்பட்டோர் சிக்கினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பலர் தப்பினர்; எட்டு தொழிலாளர்கள் மட்டும் உள்ளே சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், மாநில பேரிடர் மீட்புப் படையினர், களமிறங்கி உள்ளனர்.சுரங்கத்தின் முகப்பில் இருந்து 14 கி.மீ., தொலைவில், 200 மீட்டர் நீளத்துக்கு சேதம் ஏற்பட்டது. அதில் இருந்து வெளியாகும் நீர்க்கசிவு, இடிபாடுகள், சகதி, மண் குவியல் போன்றவை மீட்புப் பணிக்கு சவாலாக உள்ளன. 13 கி.மீ.,-யில் இருந்தே தண்ணீர் தேங்கி இருப்பதால் மீட்பு குழுவினரால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. தண்ணீரையும், சகதியையும் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கனரக உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியாததால் மாற்று கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை நோக்கி மீட்புப் படையினர் குரல் கொடுத்தபோது, பதிலுக்கு குரல் எதுவும் வரவில்லை என்றும், இடிபாடுகளை அகற்றினால் தான் அவர்களை சென்றடைய முடியும் என்றும், மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, மீட்பு பணி தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அமைச்சர் உத்தம் குமார் கூறுகையில், “அனைத்து சுரங்க நிபுணர்களுடன் இணைந்து நொடிக்கு நொடி மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறேன். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை