உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சங்கர் நாக் பெயர்?

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சங்கர் நாக் பெயர்?

பெங்களூரு: கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சங்கர் நாக். கடந்த 1990ல் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் சங்கர் நாக் நண்பரும், மூத்த கன்னட நடிகருமான ரமேஷ் பட் பெங்களூரில் அளித்த பேட்டி:பெங்களூருக்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்று முதன் முதலில் ஆசைப்பட்டவர் சங்கர் நாக். இது பற்றி அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும்.கடந்த 1989ல் சங்கர் நாக் 9 லட்சம் ரூபாய் செலவு செய்து, பெங்களூரில் எந்தெந்த பாதையில் மெட்ரோ ரயில் இயங்க வேண்டும் என்பது குறித்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தார். அதை அரசிடம் சமர்ப்பித்து, மெட்ரோ ரயில் சேவை வழங்க கோரிக்கையும் வைத்தார்.பெங்களூரில் 2011ல் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது. பெங்களூரில் 65 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்திற்கு சங்கர் நாக் பெயரை சூட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை