உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.பி., - எம்.எல்.ஏ., மீதான வழக்கு விரைவாக முடிக்க என்ன வழி?

எம்.பி., - எம்.எல்.ஏ., மீதான வழக்கு விரைவாக முடிக்க என்ன வழி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எம்.பி., - - எம்.எல்.ஏ.,க்கள் மீதான, 2,000க்கும் மேற்பட்ட வழக்குகளில், கடந்தாண்டு மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகள் விசாரணையை வேகமாக முடிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுதும் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள், ஒரு குறிப்பிட்ட வழக்கை முடிந்தவரை ஓர் ஆண்டுக்குள் முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிமினல் வழக்குகள்

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவுவதற்கு, அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:தற்போது லோக்சபாவுக்கு நடக்கும் தேர்தலில், முதல் இரண்டு கட்டங்களில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 2,810 பேரில், 501 பேர் மீது, அதாவது, 18 சதவீதம் பேர் மீது வழக்குகள் நிலுவை யில் உள்ளன. கடந்த 2019 தேர்தலின்போது போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில், 1,500 பேர் மீது, அதாவது, 19 சதவீதம் பேர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தன.அதே நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 514 எம்.பி.,க்களில், 225 பேர் மீது, அதாவது, 44 சதவீதம் பேர் மீது வழக்குகள் உள்ளன. கிரிமினல் வழக்குகள் இல்லாதவர்களைவிட, கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களே அதிகளவில் தேர்வாகியுள்ளனர்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளில் விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதை, அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.கடந்த, 2023ம் ஆண்டில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான, 2,018 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆலோசனை

அதே நேரத்தில், புதிதாக, 1,746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்தாண்டு ஜன., 1ம் தேதி நிலவரப்படி, நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4,474 ஆக உள்ளது.கடந்தாண்டில் அதிக வழக்குகளில் தீர்வு காணப்பட்டாலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. அதனால், சிறப்பு நீதிமன்றங்களில், மூன்று ஆண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் விபரங்களை உயர் நீதிமன்றங்கள் கேட்டு பெற வேண்டும். அவற்றை விரைவாக முடிப்பதற்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்புசாமி
ஏப் 23, 2024 17:06

முதலில் விசாரணை ரகசியமாக இருக்கணும். பிடிபட்ட ஆளு தப்பிக்கமுடியாத படி ஆவணங்களை ரெடி.பண்ணிட்டு வழக்கு போடணும் நம்ம ரெய்டு அதிகாரிகள் தொப்பை மாதிரி எல்லா விசாரணையும் வெளியே தெரியுது. எல்லோரும் தப்பிச்சுடறாங்க.


Rajasekar Jayaraman
ஏப் 23, 2024 17:02

முதலில் சுப்ரீம் கோர்ட்டை சரி செய்ய வேண்டும் அங்கு உள்ள களைகளை அகற்ற வேண்டும் அப்பொழுதுதான் தண்டனையை நிறுத்தி வைக்கும் எண்ணம் எவருக்கும் வராது.


Rajasekar Jayaraman
ஏப் 23, 2024 16:58

குற்றவாளிகளின் தண்டனை நிறுத்தி வைப்பது ஒரே வழி அதைத்தான் தமிழக அமைச்சர்களின் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் செய்து வருகிறது.


rao
ஏப் 23, 2024 08:31

First and foremost, SC should stop interfering in the cases that are being heard in lower courts.


Dharmavaan
ஏப் 23, 2024 07:36

பொன்முடி போன்றவங்களின் வழக்கை நிறுத்திவைத்த உச்ச நீதியை தண்டிப்பது யார்


Sankar Ramu
ஏப் 23, 2024 02:58

ஒரு வழி இருக்கு எல்லா கேஸையும் தள்ளுபடி பண்ணிடுங்க ??


Sankar Ramu
ஏப் 23, 2024 02:57

மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்து என்ன பயன்? நீதிமன்ற நேரம் அரசி்வரிபணம்தான் வேஷ்ட்டு எப்படியும் உச்சநீதி மன்றத்தில் அதிக பணம் வாங்கும் வக்கீல் வைத்து மறுபடியும் மந்திரி ஏன் முதல்வராக கூட வருவார்கள் நீதி துறை மீது நம்பிக்கை இல்லை மக்களுக்கு பேசாம எல்லாம் நீதி மன்றத்தையும் உச்சநீதி மன்றமாக்கிடுங்க யுவர் ஆனர் ?


murali
ஏப் 23, 2024 01:50

காமெடி காமெடி


sankaranarayanan
ஏப் 23, 2024 00:42

அடுத்த தேர்தல் வருவரை காத்திருந்து பிறகுதான் இவ்வழக்குகள் முடிவடைகின்றன உச்ச நீதி மன்றமே இதில் தலையிட்டு ஓராண்டுக்குள் முடிக்கும்படி செயல்படவேண்டும்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி