உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,யில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளின் நோக்கம் என்ன? குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

பார்லி.,யில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளின் நோக்கம் என்ன? குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

புதுடில்லி : பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது வண்ண புகை குண்டுகளை வீசிய குற்றவாளிகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தி, உலக அளவில் உடனடியாக கவனம் பெறுவதற்காகவே அந்த தாக்குதலை நடத்தியதாக, போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பார்லிமென்ட் வளாகத்திற்குள், கடந்த 2001ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் நினைவு நாள் ஆண்டுதோறும் டிச., 13ல் அனுசரிக்கப்படுகிறது. கடந்த டிச., 13ல் லோக்சபாவுக்கு உள்ளேயும், வெளியேயும், வண்ண புகை குண்டுகளை வீசியதுடன், நாட்டுக்கு எதிராகவும் சிலர் கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக, கர்நாடகாவை சேர்ந்த மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆசாத் ஆகியோரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இவர்களுக்கு உதவிய லலித் ஜா, மகேஷ் குமாவத் ஆகியோரை இரு தினங்களுக்கு பின் கைது செய்தனர். இவர்கள் ஆறு பேரும், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு எதிராக, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் போலீசார் 1,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில், குற்றவாளிகள் ஆறு பேரும், சமூக வலைதளம் வாயிலாக அறிமுகம் ஆனதாகவும், பார்லி., தாக்குதல் குறித்து இரண்டு ஆண்டுகள் அவர்கள் திட்டமிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், இரண்டு ஆண்டு கால இடைவெளியில் ஐந்து முறை அவர்கள் சந்தித்து பேசியதும், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தி, உலக அளவில் உடனடி கவனத்தை ஈர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

J.Isaac
செப் 09, 2024 15:19

எந்த கட்சியை சார்ந்தவர்கள் ?


Appan
செப் 09, 2024 08:08

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் காரன் பார்லிமென்டின் மேல் குண்டு போட்டான் . பிஜேபி ஆட்சியில் இந்தியர்களரே பார்லிமென்டின் மேல் குண்டு போடுகிறார்கள் ..இது தான் வித்தியாசம் ..பிஜேபி இன்னும் இந்தியாவை அறியவில்லை ..காங்கிரஸ் செய்த தவறுகளை மக்கள் வெறுத்து பிஜேபிக்கு ஒட்டு போட்டார்கள் ..பிஜேபியின் சித்தத்திற்கு யாரும் ஒட்டு போடவில்லை ..ஒட்டு மொத்த இந்தியாவே பிஜேபி காஸ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆதரவு தந்தத்து..அதை வெறிக்கரமாக பிஜேபி செய்ததது ..அதற்காக காஸ்மீர் போல் மற்ற மானிலங்களை ஆளலாமா ?.இந்திரா, தன் ஆட்சியில் இருக்க இந்தியாவை மறந்து மக்களை அடக்கி , பொருளாதாரத்தை பார்க்காமல் ஆட்சி செய்தார் ..இப்போ பிஜேபியும் அதே போல் ஆள்கிறது ..மன்மோகன் ஆட்சியில் தான் இந்திய பொருளாதாரம் 2.6 Trill ஆக வளர்ந்தது..இந்த 10 வருட பிஜேபி ஆட்சியில் பொருளாதாரம் வெறும் 3.6 Trill வளர்ந்து உள்ளது ..பிஜேபி பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் எல்லோரும் காவி உடை உதாத்தனும் என்று நேரத்தை வீணடிக்கிறார்கள் ,,விளைவு இந்திய வளர முடியவில்லை ..


N.Purushothaman
செப் 09, 2024 06:42

நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லைன்னு சொல்லி வழக்கில் இருந்து விடுவித்து அப்படியே எளிமையாக கடந்து போகும் ....


Lion Drsekar
செப் 09, 2024 06:25

வண்ணப்புகை குண்டு, தாக்குதல், கத்தியால் குத்துதல், கொலை செய்தல், கற்பழிப்பு, இவைகள் அனைத்துமே முழுநேர தொழிலாக சீரும் சிறப்புமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது . இதற்க்கு சாட்சி நேர்மையான செய்தித்தாள் மற்றும் ஊடகங்கள், இன்று வாசகர்கள் அனைவருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தவறானவர்கள் அனைத்துப் பெயரும் மனதில் பதியும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது . நடைப்பயிற்சி முதல் தூங்கும்வரை எங்கு கானினினும் இதே பேச்சுதான் . எங்கள் வீட்டுக்கு அருகில் இந்த சம்பவம், எங்கள் வீட்டிலேயே இந்த நிலை, என்று புலம்பாத நபர்கள் இல்லை, தீய சக்திகளை கைது செய்யச் செல்லும் அதிகாரிகளுக்கே மிரட்டல், அப்படி இருக்க குற்றவாளிகளில் சீட்டு ஆடுபவர்கள் உள்ளே வெளியே என்று சொல்வார்கள் அதுபோல் அது வெளியே , இது உள்ளே, இரண்டுக்கும் வேறுபாடு எதுவுமே இல்லை, ஒன்று ஆக்கிரமிப்பு, தங்கள் மனம் நினைப்பதை செய்யவேண்டும், ஒவ்வொரு நாடும் அவர்கள் கூறுவதை மட்டுமே கேட்கவேண்டும், உள்ளே அப்படி இல்லை, இன்றைக்கு வரவு, நாளைக்கு சிறை, மறுநாள் இதே தொழில், மொத்தத்தில் மிக அருமையான கதியில் சென்றுகொண்டு இருக்கிறது மனித நேயம், வாழ்க வளமுடன், வந்தே மாதரம்


Kasimani Baskaran
செப் 09, 2024 05:32

பாதுகாப்பை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.


புதிய வீடியோ