உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை பெய்தால் சாலையில் பள்ளம் ஏற்படுவது சகஜமாம்!

மழை பெய்தால் சாலையில் பள்ளம் ஏற்படுவது சகஜமாம்!

பெங்களூரு: ''யார் ஆட்சி நடந்தாலும், மழைக்காலங்களில் சாலைகளில் பள்ளங்கள், வெள்ளம் ஏற்படுவது சகஜம்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.பெங்களூரில் சில நாட்களாக பெய்த மழையால், 6,000க்கும் அதிகமான சாலை பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. பள்ளங்களை, மூடாமல் அலட்சியமாக செயல்படும், காங்கிரஸ் அரசுக்கு, எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது 'பிராண்ட் பெங்களூரு' அல்ல; பள்ளங்கள் பெங்களூரு என்று பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.இதற்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று கூறியதாவது:பெங்களூரு நகரை, பிராண்ட் பெங்களூருவாக மாற்ற வேண்டும் என்பது துணை முதல்வர் சிவகுமாரின் கனவு. இதை, நம் தலைவர்களே ஏளனம் செய்ய கூடாது. பள்ளங்கள் பெங்களூரு என்று கிண்டல் அடிப்பது சரியில்லை.இத்தகைய பேச்சு மூலம், மாநிலத்துக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன தகவல் சொல்கிறீர்கள்? பா.ஜ.,வினர் பொறுப்புடன் பேச வேண்டும். யார் ஆட்சி நடந்தாலும், மழைக் காலங்களில் சாலைகளில் பள்ளங்கள், வெள்ளம் ஏற்படுவது சாதாரணம்.பா.ஜ., ஆட்சியிலும் மழை வெள்ளம் ஏற்பட்டது. சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டன. பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதை சரிப்படுத்துவோம். அரசும் பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
மே 26, 2024 12:48

தமிழ் நாட்டைய விட கேரள மாநிலத்தில் மழை பொழிவு அதிகம். அது மட்டு மல்ல பெரும்பாலும் சாலைகள் மலை பிரதேசத்தில். இருந்தும் மழை சீசன் முடிந்த உடனே ஹைவேஸ் வெகு விரைவில் சேதமடைந்த சாலைகளை அதை அதி விரைவாக சரி செய்து விடுகிறார்கள் சாலைகளின் தரமும் சிறப்பாகா இருக்கு? இது எப்படி நம் பக்கத்துக்கு மாநிலத்திற்கு முடியுது நம்மால் முடிய வில்லை. சாலிய்ய ஹிரனும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. சவடாலாகா ஊடகங்களுக்கு மட்டும் அறிக்கையை கொடுத்து விடுவார்கள்.. கான்க்ரஸ் ஆட்சியின் போனது சிறப்பாக தான் இருந்தது பின்பு இப்போது வர வர மாமியா கழுதை போல் ஆனாளாம் கதைய்ய தான்.


enkeyem
மே 26, 2024 10:31

மழை பெய்தால் சாலைகளில் பள்ளம் ஏற்படுவது சகஜம். பள்ளம் ஏற்படாத அளவுக்கு மலை நீர் தேங்காமல் சாலை போட்டால் நீர் தேங்கி சாலைகளில் பள்ளம் ஏற்படாது. அப்படியே பள்ளம் ஏற்பட்டாலும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனே அதை அரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே


Palanisamy Sekar
மே 26, 2024 10:18

மழை பெய்தால் குடிசைகளில் மழை நீர் ஒழுகுவதை கண்டுள்ளோம்.. முறையாக தார் சாலையில் எப்படி பள்ளம் வரும்? அமைச்சரைன் வீட்டில் மட்டும் ஏன் மழை நீர் ஒழுகுவதில்லை? முறையாக காட்டியதால் கான்க்ரீட் கலவை சரியாக இருப்பதால் கட்டிடம் பார்த்து பார்த்து காட்டுகிண்றீர்களே.. பின்னர் ஏன் சாலையில் மட்டும் பள்ளம் வரும்படி விட்டுவைக்கின்கிறீர்கள்? ஏனெனில் நீங்கள் வாங்குகின்ற லஞ்ச ஒதுக்கீடு போக மீதிப்பணத்தில் சாலையை போட்டால் பள்ளம் மட்டுமல்ல பாதாள சுரங்கம் கூட உருவாகும். அமைச்சருக்கு தகுதியே இல்லாத நபர் இந்த ஆள்.


chennai sivakumar
மே 26, 2024 07:32

எங்க ஊருக்கு தேர்மொகூல் விஞானி. உங்க ஊருக்கு ஒருவர். நாடு நன்கு முன்னேறி விடும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை