உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா பா.ஜ, முதல்வர் யார் ? இன்று ஆலோசனை

ஒடிசா பா.ஜ, முதல்வர் யார் ? இன்று ஆலோசனை

புவனேஸ்வரம்: ஒடிசா பா.ஜ., முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூட்டம் இன்று கூடி அறிவிக்கிறது.லோக்சபா தேர்தலுடன் இம்மாநில சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.இதையடுத்து இன்று நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பூபேந்திர யாதவ் ஆகியோர் பங்கேற்று பா.ஜ. சட்டசபை கட்சி தலைவரை தேர்வு செய்யகின்றனர். தேர்வு செய்யப்படுபவர் முதல்வராக நாளை (ஜூன் 12) பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஜூன் 11, 2024 07:07

எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலில் போட்டியிட்டால் அது தவறு என்று நக்கல் செய்தவர்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளிவந்து இப்போது வரை ஒரிசா மாநில முதல்வரை தேர்ந்தெடுக்க முடியவில்லை! வெட்கக்கேடு!


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 09:40

முடிவுகள் எதிர்பாராதவிதமாக அமைந்தால் இது நடக்கலாம். இந்த வெற்றி பிஜெபிக்கே ஆச்சர்யம். இப்போது கூட நவீன் பட்நாயக் விரும்பினால் அவருக்கு முதல்வர் பதவியை அளிக்க மோதி தயங்கமாட்டார்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை