உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா காங்., புது முதல்வர் யார்?

கர்நாடகா காங்., புது முதல்வர் யார்?

பெங்களூரு : முதல்வர் சித்தராமையா பதவியில் தொடர முடியாத நிலை உருவானால், அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. நீண்ட காலமாக அந்த நாற்காலி மீது கண் வைத்துள்ள துணை முதல்வர் சிவகுமாருக்கு இப்போதும் அந்த வாய்ப்பு வராது என தோன்றுகிறது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் அப்பதவியை பெறக்கூடும் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்த விவகாரத்தில் முதல்வர் மீது சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர், கவர்னர் தாவர் சந்த் கெலாட்டிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் முதல்வர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்தார்.

எதிர்க்கட்சிகள் நெருக்கடி

பதவியை ராஜினாமா செய்து, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என, சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ராஜினாமா செய்யமாட்டேன் என சித்தராமையா கூறி வருகிறார். கவர்னர் அனுமதியை எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளார். டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் வேணுகோபால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கர்நாடகாவுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.பின், செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, கட்சி மேலிடம் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறினார். எனினும், சித்தராமையா ஒருவேளை பதவி விலக நேர்ந்தால், அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக அவருடன் மேலிடம் ஆலோசித்ததாக கூறப்பட்டது. துணை முதல்வர் சிவகுமாரை தவிர யாரை நியமித்தாலும் பிரச்னை இல்லை என சித்துவின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். 'அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும்' என சித்தராமையா கூறியதை, மேலிடம் ஏற்றுக் கொண்டதாக ஒரு நிர்வாகி தெரிவித்தார். கவர்னரின் அனுமதிக்கு கோர்ட் தடை விதித்தால் சித்து ராஜினாமா செய்ய தேவையில்லை.

ஆலோசனை

அப்போது அமைச்சரவையை அவர் மாற்றக்கூடும். ஆறு அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை. அவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சித்து முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.முதல்வருக்கு எப்போது நெருக்கடி வந்தாலும், அந்த பதவியை பிடிக்க துணை முதல்வர் சிவகுமார் காய் நகர்த்துவது வழக்கம். இம்முறையும் அவர் டில்லியில் அதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளார். உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அவருக்கு போட்டியாக களம் இறங்கி உள்ளார். நேற்று டில்லியில் அவர் வேணுகோபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர் தலித் என்பதால் முன்னுரிமை அளிக்க மேலிடம் விரும்புகிறது. வால்மீகி வகுப்பை சேர்ந்த சதீஷ் மீதும் மேலிடத்தின் கனிவு இருப்பதாக தெரிகிறது.

அமைச்சர் மீது புகார்

கர்நாடக நகர மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பைரதி சுரேஷ். முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்.நகர மேம்பாட்டுத் துறையின் கீழ்தான் 'மூடா' வருகிறது. மூடாவில் நடந்த முறைகேட்டை வைத்து எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியலை சரியாக கையாளவில்லை என, கட்சி மேலிடத்திடம் பைரதி சுரேஷ் மீது சில மூத்த எம்.எல்.ஏ.,க்கள் போட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த 22ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டம், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை அவர் புறக்கணித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
ஆக 25, 2024 15:27

என் சி பி போல காங்கிரசும் உடையப்போகிறதோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஏனென்றால் சிந்துவும் சிவகுமாரும் அஜித் பவர் & ஷிண்டே போல கட்சிக்கு முடிவு கட்ட வாய்ப்பு இல்லாமல் இல்லை.


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 16:33

வாய்ப்பே இல்ல , கட்சியினர் இரு அணியா பிரிந்தாலும் குமாரசாமி கட்சியை பிரிக்க சமீர் அஹ்மது பேசி கொண்டிருப்பதாக ஒரு செய்தி ஓடிக்கொண்டுள்ளது , காங்கிரஸ் இரு அணியா பிரிந்து வேலை பார்ப்பாங்க , ஆனா காங்கிரஸ் தான் ஆண்டுகொண்டிருக்கும்


bhuvanesh
ஆக 25, 2024 13:34

Operation லோட்டஸ் 2.0 starts


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 16:32

இது டிகேசி யின் கைவண்ணம் அய்யா மறந்துடாதீங்க


அப்புசாமி
ஆக 25, 2024 11:49

நான் போனாலும் பரவாயில்லை.


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 10:19

ஆபிரகாமின் 2015 முகநூல் செய்திகள் சிவகுமாரை ஆதரித்து இருக்கும் , சித்துவோ குமாரசாமியை/கவர்னரை குறிவைத்து தாக்கி கொண்டுள்ளார் இப்போ யோசிச்சு பார்க்கவே தலை சுத்துது


N.Purushothaman
ஆக 25, 2024 07:03

செய்த ஊழலையும் தவறையும் நியாயப்படுத்துற முதல்வர் ....இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் அரசியல் எந்த அளவிற்கு குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் அரசியல் எந்த அளவிற்கு சீர்கெட்டு உள்ளது என்பதற்கு மேலும் ஒரு சாட்சி ..


RAMAKRISHNAN NATESAN
ஆக 25, 2024 06:15

டி கே சிவகுமாருடன் பாஜக போட்ட ஒப்பந்தமாக இருக்கலாம் ....


lana
ஆக 25, 2024 02:38

சமூக நீதி ன்னு இங்க பல காலமாக கம்பு சுத்து கிறார்கள். ஆனால் இங்கு பட்டியல் இனம் கக்கன் க்கு பிறகு உள்துறை அமைச்சர் ஆக வில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை