உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் வெல்லப்போவது யார்? பா.ஜ., - ஒய்.எஸ்.ஆர்.காங்., குஸ்தி!

திருப்பதியில் வெல்லப்போவது யார்? பா.ஜ., - ஒய்.எஸ்.ஆர்.காங்., குஸ்தி!

திருப்பதி: ஆந்திராவின் திருப்பதி லோக்சபா தொகுதியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சிட்டிங் எம்.பி., மட்டிலா குருமூர்த்தியை, பா.ஜ., வேட்பாளரும், மூத்த தலைவருமான வரபிரசாத் ராவ் வெலகப்பள்ளி வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 13ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் - நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.மொத்தமுள்ள, 25 லோக்சபா தொகுதிகளில், திருப்பதி உள்ளிட்ட ஆறு தொகுதிகளில், பா.ஜ., போட்டியிடுகிறது.திருப்பதி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக, 71 வயதாகும் வரபிரசாத் ராவ் வெலகப்பள்ளி களமிறக்கப்பட்டு உள்ளார். இவரை எதிர்த்து, 38 வயதாகும், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சிட்டிங் எம்.பி., மட்டிலா குருமூர்த்தி போட்டியிடுகிறார்.அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்கள், வரபிரசாத் ராவ் வெலகப்பள்ளி வெற்றிக்கு கைகொடுக்கும் என, பா.ஜ., நம்புகிறது. எனினும், மட்டிலா குருமூர்த்தியை தோற்கடிக்கும் வகையில், வரபிரசாத்தால் வாக்காளர்களை ஈர்க்க முடியுமா என்பது சந்தேகமே என, உள்ளூர் பா.ஜ., நிர்வாகிகளே கருத்து தெரிவிக்கின்றனர்.மேலும், மட்டிலா குருமூர்த்தியை வெல்ல சிறந்த வேட்பாளரை கட்சி தலைமை நிறுத்தியிருக்க வேண்டும் என்றும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.எம்.பி., மட்டிலா குருமூர்த்தி கூறுகையில், “ராமர் கோவில் விவகாரம் தொகுதியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எங்களுக்கு மக்கள் ஆதரவு வலுவாக உள்ளது. திருப்பதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்,” என்றார்.

வெற்றி வாகை

ராமர் கோவில் கட்டியது, பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களை, பா.ஜ., முன்னெடுத்துள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் செய்த வளர்ச்சிப் பணிகளை, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எடுத்துரைத்து வருகிறது. இதில், யாருடைய பிரசாரம் வெற்றி வாகை சூடப் போகிறது என்பது, ஜூன் 4ல் தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

குமரி குருவி
மே 09, 2024 07:14

ஆளுங்கட்சி ஜெயித்தால் லட்டு அல்லது மொட்டை


J.V. Iyer
மே 09, 2024 03:51

கோவிலை கொள்ளை அடிக்கும் கட்சிக்கு மக்கள் ஆதரவா? மக்கள் தமிழகம் போல மதிகெட்டு இருக்கின்றனரே ஏழுகுண்டலவாசா மகேசா திருப்பதி ஏழுமலையானே இது என்ன சோதனை மனவேதனை


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி