மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசியது ஏன் என்பதற்கு, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் விளக்கம் அளித்து உள்ளார்.கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஹரிபிரசாத். எம்.எல்.சி.,யாக உள்ளார். இவருக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் ஏழாம் பொருத்தம். அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த ஹரிபிரசாத், நான் நினைத்தால் முதல்வர் பதவியில் இருந்து, சித்தராமையாவை இறக்க முடியும் என்று சவால் விடும் வகையில் பேசி இருந்தார். பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் கூட, இருவரும் முகம் கொடுத்து பேசுவது இல்லை.இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவை, பெங்களூரு காவிரி இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு, ஹரிபிரசாத் திடீரென சந்தித்து பேசினார். இது காங்கிரசாருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சந்திப்பு குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம் அளிக்கையில், ''ஹரிபிரசாத் எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவர் என்னை சந்தித்து பேசியதில் என்ன தவறு உள்ளது,'' என்றார்.ஹரிபிரசாத் நேற்று அளித்த பேட்டி:மைசூரில் நடக்கும் காங்கிரஸ் கூட்டம் தொடர்பாக விவாதிக்க, சித்தராமையா எனக்கு அழைப்பு விடுத்தார். இதனால் அவரை சந்தித்து பேசினேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மன வேறுபாடுகள் இல்லை. மைசூரு கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்பேன். எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுக்கு, மைசூரில் பதிலடி கொடுப்போம்.தேவகவுடா உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் அரசியலில் துறவி இல்லை. அவர்கள் அவர்களின் அரசியலை செய்யட்டும். நாங்கள் எங்கள் அரசியலை செய்கிறோம். கவர்னர் அலுவலகத்தை பா.ஜ., அரசியலுக்கு பயன்படுத்துவது புதிது இல்லை. நாட்டில் உள்ள அனைத்து கவர்னர் அலுவலகமும், பா.ஜ., அலுவலகம் தான்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 4