உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி வேறு நபரை காதலிப்பது கள்ளக்காதல் அல்ல: ம.பி., ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மனைவி வேறு நபரை காதலிப்பது கள்ளக்காதல் அல்ல: ம.பி., ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

போபால்: 'மனைவி வேறு ஆணுடன் உடலுறவு இல்லாமல் காதலில் இருப்பது, கள்ளக்காதல் என்று கூற முடியாது' என உத்தரவிட்டுள்ள மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், 'வேறொரு ஆணுடன் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என கூறி, பராமரிப்பு தொகையை தர, கணவர் மறுக்க முடியாது' என, உத்தரவிட்டு உள்ளது.

பராமரிப்பு தொகை

மத்திய பிரதேச மருத்துவமனை ஒன்றில், வார்டு பாயாக, மாதம், 8,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றும் கணவர், விவாகரத்தான தன் மனைவிக்கு மாதந்தோறும் அளித்து வரும் பராமரிப்பு தொகையை தொடர்ந்து வழங்க முடியாது என, குடும்ப நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்காக, 'என் மனைவி வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாதம், 4,000 ரூபாய் பராமரிப்பு தொகையே அதிகம். அந்த தொகையை வழங்கவே கஷ்டப்படுகிறேன். 'எனவே, பராமரிப்பு தொகையை தொடர்ந்து வழங்குவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். அந்த மனு, குடும்ப நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில், அவர் மேல் முறையீடு செய்தார்.

மறுக்க முடியாது

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.அலுவாலியா, கடந்த மாதம் 17ல் பிறப்பித்த உத்தரவு:கள்ளக்காதல் என்றாலே அந்த பெண், வேறொரு ஆணுடன் உடல் உறவில் ஈடுபட்டு வருகிறார் என்பதாகத் தான் பொருள். ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, இன்னொரு நபருடன் அந்த பெண் மனதளவில் அன்பு கொண்டுள்ளார் என்பது தான் தெரிகிறது.அந்த ஆணுடன், இந்த நபரின் மனைவி உடல் உறவில் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிக்க, அவர் கணவர் போதிய ஆதாரங்களை வழங்கவில்லை.எனவே, கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி, மனைவிக்கு மாதந் தோறும் கொடுத்து வரும் பராமரிப்பு தொகையை கொடுக்க, அந்த கணவர் மறுக்க முடியாது.அந்த தொகையை, அந்த கணவர், தன் மனைவிக்கு கொடுக்கவே வேண்டும். இதுகுறித்து, குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அந்த கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.அதுபோல, அந்த கணவர் அளித்துள்ள சான்றுகளின் படி, அவருக்கு மாதம் கிடைக்கும், 8,000 ரூபாய் போதுமானதாக இல்லை என்பதையும், அவரின் மனைவி பியூட்டி பார்லர் நடத்தி, போதுமான அளவு சம்பாதிக்கிறார் என்பதையும், ஆதாரங்களுடன் நிரூபிக்க கணவர் தவறி விட்டார்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Karthik
பிப் 15, 2025 23:05

இதோ கொஞ்சம் நஞ்சம் மிச்சம் மீதி இருக்கும் மானம் மரியாதையும் கப்பலேற ஏணி..


எவர்கிங்
பிப் 15, 2025 18:49

அப்படியென்றால் கணவன் கள்ளக்காதல் செய்வதும் குற்றமில்லை.... சொரியாரின் சித்தாந்தம்


aaruthirumalai
பிப் 15, 2025 15:40

இந்த தீர்ப்பு இங்க ஒரு குரூப்புக்கு கண்டிப்பாக பிடிக்கும். புரிந்தவர் பிஸ்தா


பேசும் தமிழன்
பிப் 15, 2025 15:30

.நாடு விளங்கிடும்..... அதை போல் கணவன் இருந்தாலும் தவறு இல்லையா.... அதையும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.


Haja Kuthubdeen
பிப் 15, 2025 14:41

என்னங்கய்யா இதெல்லாம்...


Ramesh Sargam
பிப் 15, 2025 12:58

நீதிமான்கள் ஒன்றை கூர்மையாக கவனிக்கவேண்டும். வேறொரு ஆணுடன் மனைவி உடலுறவு இல்லாமல் வெறும் கள்ளக்காதலில் மட்டும் இருக்க வாய்ப்பே இல்லை. நீங்கள் கூறுவது எப்படி இருக்கு என்றால், எதிரில் சுவையான பிரியாணியை வைத்துக்கொண்டு, அதை சுவைக்காமல், வெட்டித்தனமாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். என்னதான் சட்டம் படித்தீர்களோ? இதெல்லாம் சட்ட புத்தகத்தில் இருக்காது. நாம் சுயமாக சிந்தித்து செயல்படவேண்டும். மன்னிக்கவும் நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். ஏதோ என் அறிவுக்கு எட்டியதை கூறினேன். அவ்வளவுதான்.


Kanns
பிப் 15, 2025 11:50

Sack& Punish All AntiSociety-AntiMarriage ProWomen AntiMen GenderBiased Judges Without Mercy


S Regurathi Pandian
பிப் 15, 2025 10:42

ஒரு பெண்ணும் ஆணும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அந்த இருவர் சாராமல் வேறு யாரால் நிரூபிக்க முடியும்? கேலிக்கூத்து


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 15, 2025 10:21

சூப்பர். நாடு உருப்படும். இந்தமாதிரியான நீதிபதிகள்தான் நமக்கெல்லாம் தீர்ப்பு வழங்குகிற இடத்தில இருக்கிறார்கள் என்பது நாம் செய்த "பாக்கியம்". ஆனால், இன்றைக்கு நாடு நாசமாக போக காரணம் இது போன்ற தத்திகள் உயர் பதவிக்கு சென்றுவிடுவதுதான்.


vbs manian
பிப் 15, 2025 09:45

ஆஹா என்ன தீர்ப்பு. முன்பு அடெல்ட்ரி தண்டிக்கத்தக்க குற்றம் அல்ல என்று சொன்னார்கள். திருமண உறவை ஆபரேஷன் செயகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை