உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியின் ஆபாச அரட்டையை சகிக்க முடியாது: விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கருத்து

மனைவியின் ஆபாச அரட்டையை சகிக்க முடியாது: விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கருத்து

போபால்: விவாகரத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், 'மனைவி தன் ஆண் நண்பர்களுடன் ஆபாசமாக உரையாடுவதை எந்த கணவனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது' என, தெரிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில், 2018ல் திருமணம் செய்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். அந்த மனுவில், 'தன் மனைவி திருமணத்துக்கு பிறகு முன்னாள் காதலர்கள், ஆண் நண்பர்களுடன் மொபைல் போனில் உரையாடினார். மிகவும் ஆபாசமான, 'வாட்ஸாப்' அரட்டைகளில் ஈடுபட்டார்' என, அவர் குறிப்பிட்டு இருந்தார். வழக்கு விசாரணையின் போது, 25 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மனைவி தெரிவித்தார். வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், அவர்களுக்கு விவாகரத்து அளித்தது.இதை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:திருமணத்துக்கு பின் கணவன் - மனைவி தன் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசவோ, வாட்ஸாப் அரட்டை அடிக்கவோ உரிமை உள்ளது. ஆனால், அவை கண்ணியமாக இருக்க வேண்டியது அவசியம். அதுவும் குறிப்பாக எதிர்பாலினத்தவர்களுடன் பேசும் போது கண்ணியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.மனைவி, ஆண் நண்பர்களுடன் தன், 'செக்ஸ்' வாழ்க்கை குறித்தும், ஆபாசமாகவும் பேசுவதை எந்த கணவனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், தொடர்ந்து அதைச் செய்வது மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.இந்த வழக்கில், பெண்ணின் தரப்பில் தவறு இருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல ஆண் நண்பர்கள் இருப்பதை அவரது தந்தையே உறுதி செய்துள்ளார்.எனவே, குடும்பநல நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mohamed Ishaq
மார் 15, 2025 15:40

பெண் உரிமை பாதிக்கிறது பெண் சுதந்திரம் பறிபோகிறது பெண் உரிமை மறுக்கப்படுகிறது ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்குறு நீதியா சமநீதி இல்லையா சமத்துவம் இல்லையா இன்று இப்போது ஞாயம் பேசுபவர்களை பொங்க சொல்லுங்கள் பார்க்கலாம்


M Ramachandran
மார் 15, 2025 15:18

நாவீன உலகத்தில் பெரு நகரஙகளில் சொந்த உரை விட்டு வேளயில் அமர்ந்துள்ள பெண்கள் பெற்றோருக்கு தெரியாது என்று பல தவறான வழியில் வாழ்கிறார்கள். இது ஹெரிந்த அக்கம் பக்கத்தவர்க்கார்கள் அவர்களுடன் பேச்சை துண்டித்து கொள்வார்கள். கிராமத்து பெட்ரோனார்கள் இது விஷயம் அறிந்தால் துடி துடித்து போவார். கண்டிக்க இயலாத நிலை. பொஆரூரில் 2 குழந்தையய்க்காலிய்ய பெற்றவள் குழந்தைய்யகளை விஷம் கொடுத்து கொன்ற கொடுமை ஊடகத்தில் பார்த்தோம். பிரியாணி டெலிவரி பாயுடன் ஓடி போனால்.


Sudha
மார் 15, 2025 12:50

இவனுக்கெல்லாம் ஒரு புருஷன் ஒரு அப்பா ஒரு வக்கீலு,


James Mani
மார் 15, 2025 10:31

மத்திய பிரதேஷ் லூக் லைக் யுவர் Veedu


சண்முகம்
மார் 15, 2025 10:15

இது நிச்சயமாக கோழைமணி அறிவுறுத்தும் "Marriage without Responsibility."


VENKATASUBRAMANIAN
மார் 15, 2025 08:12

காலத்தின் கோலம். பெண்ணுரிமை எனற பெயரில் எல்லை மீறுவது.


Kasimani Baskaran
மார் 15, 2025 07:11

கெளரவமாக? அரட்டை அடிப்பதற்க்கே இப்படி என்றால் கும்மாளம் போட்டு இருந்தால் என்னவாயிருக்கும்... குடும்பத்துடன் அதிகநேரம் செலவிடுவது மிக அவசியம்.


Svs Yaadum oore
மார் 15, 2025 07:00

இது திராவிட பெண்ணாகத்தான் இருக்கனும் ....


Priyan Vadanad
மார் 15, 2025 07:29

இது சூது சம்பந்தப்பட்ட விஷயமாகக்கூட இருக்க வாய்ப்புண்டு. நல்ல தாய்க்கு பிறந்தவர்கள் இப்படியெல்லாம் கருத்து பதிவிடமாட்டார்கள்.


sridhar
மார் 15, 2025 08:09

ஏதோ ஒரு சில திராவிட பெண்களை பார்த்து எல்லோரையும் அப்படி சொல்லமுடியாது . மேலும் இந்த permissiveness ஒரு வியாதி போல் உலகம் முழுதும் பெண்களை தாக்கி இருக்கிறது , எந்த இனமும் விதி விலக்கல்ல .


Svs Yaadum oore
மார் 15, 2025 06:59

மனைவி தன் ஆண் நண்பர்களுடன் ஆபாசமாக உரையாடுவதை எந்த கணவனாலும் பொறுத்துக்கொள்ள முடியாதாம் ..... ஆனால் கணவன் பெண் நண்பர்களுடன் ஆபாசமாக உரையாடினால் அதை மனைவி பொறுத்து கொள்ள வேண்டுமா ??....


Keshavan.J
மார் 15, 2025 12:13

இரண்டுமே தவறுதன். இப்போ இந்த் வழக்கு மனைவி தன் ஆண் நண்பர்களோடு ஆபாசமாக பேசினார் என்று கணவர் விவாகரத்து கேட்டு சென்றுள்ளார்


m.arunachalam
மார் 15, 2025 06:36

வர்ணம் பிரித்தது எதற்கென்று புரிந்து கொள்ள உதவும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை