உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - எம்.பி., சுதாகர்  காங்கிரசில் இணைவாரா?

பா.ஜ., - எம்.பி., சுதாகர்  காங்கிரசில் இணைவாரா?

சிக்கபல்லாபூர்: ''பா.ஜ., - எம்.பி., சுதாகர் காங்கிரசில் இணைவார்,'' என்று, உணவு அமைச்சர் முனியப்பா கூறினார்.சிக்கபல்லாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் காங்கிரசில் இருந்த போது, மரியாதையாக நடத்தப்பட்டார். ஆனால் பா.ஜ.,வில் அவருக்கான மரியாதை கிடைப்பது இல்லை. இதனால், அவர் மீண்டும் காங்கிரசில் இணைவார். காங்கிரஸ் கட்சி கடல் போன்றது. யார் வேண்டும் என்றாலும் வரலாம். சுதாகர் மட்டும் இல்லை, யார் வந்தாலும் வரவேற்போம்.முதல்வர் மாற்றம் குறித்து தற்போது எந்த விவாதமும் இல்லை. எங்கள் அரசு ஐந்து ஆண்டுகளும் நீடிக்கும். ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.அரசு மீது பொய் குற்றச்சாட்டு கூறுவதை எதிர்க்கட்சி தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். பா.ஜ.,வில் நிறைய பிரச்னை உள்ளது. ஆனால், அவர்கள் எங்களை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை