உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிம்கானா மைதானம் புதுப்பிக்கப்படுமா? தங்கவயல் இளைஞர்கள் எதிர்பார்ப்பு!

ஜிம்கானா மைதானம் புதுப்பிக்கப்படுமா? தங்கவயல் இளைஞர்கள் எதிர்பார்ப்பு!

தங்கவயல்: தங்கவயலில் புதர்மண்டி கிடக்கும் பழமையான ஜிம்கானா மைதானம் புதுப்பிக்கப்படுமா என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.தங்கவயலின் பாரம்பரிய வரலாற்றை பிரதிபலித்த நினைவுசின்னங்கள் மெல்ல மெல்ல, அழிந்து வருகின்றன. தங்கச் சுரங்கம் நிறுவிய காலத்தில், தங்கத்தின் உற்பத்திக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், தொழிலாளர்கள் நலனிலும் அதன்ஆரம்பகால அதிகாரிகள் அக்கறை செலுத்தியதன் அடையாளங்கள் பல இருந்தன.அதில் என்றும் நினைவுகூரும் வகையில் அமைந்தது உரிகம் ஜிம்கானா மைதானம். இது, தற்போது புதர்மண்டி, சீரழிந்த நிலையில் பூட்டிக் கிடக்கிறது. கடந்த 1890ம் ஆண்டில்இங்கிலாந்து, ஐரீஷ், ஆஸ்திரேலியா நாட்டினர் விரும்பி விளையாடிய பல விளையாட்டுகளில் முக்கியமானதாக கருதப்பட்டதுகால்பந்தாட்டம். இதற்காக, உரிகம் பகுதியில் 10 லட்சம் சதுர அடி நிலம் ஒதுக்கி, அதன் மையப் பகுதியில் சர்வதேச தரத்தில் கால் பந்தாட்ட மைதானத்தை உருவாக்கினர்.மழை பெய்தால் மழைநீர் தேங்காதபடி சமப்படுத்தி மழை நின்றதும் விளையாடுவதற்கு தகுதி வாய்ந்த மைதானமாகஉருவாக்கப்பட்டது. இந்த மைதானத்தில் வெளிநாட்டு வீரர்களுடன் தங்கச்சுரங்க தொழிலாளர் குடும்பத்தின் இளைஞர்களுக்கும் விளையாட வாய்ப்பு அளித்தனர்; பயிற்சியும் அளித்தனர்.ஆரம்பத்தில் வெளிநாட்டினர் மட்டுமே பூட்ஸ் அணிந்து விளையாடினர். படிப் படியாக தங்கச் சுரங்க தொழிலாளர்களான தங்கவயல்தமிழ் இளைஞர்களும் பூட்ஸ் அணிந்து விளையாட முற்பட்டனர்.நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட வெளிநாட்டினர் தங்கவயலை விட்டு வெளியேற வில்லை.தங்கச் சுரங்கம் 1956ல் தேசிய மயமாக்கப்பட்ட பின்னரே, அவர்கள் வெளியேறினர். அதன்பின்னும், சில ஆங்கிலோ இந்தியர்கள் இங்கேயே வசித்தனர்.தங்கச்சுரங்க தொழிலில் ஈடுபட்டு வந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டன. தங்கவயலில் விளையாடிய வீரர்களை தேசிய விளையாட்டு வீரர்களாக அங்கீகரித்தனர்.இந்த ஜிம்கானா மைதானத்தில் அகில இந்திய கால்பந்தாட்ட போட்டிகளையும் நடத்தினர். கால்பந்தாட்டத்தை ரசிக்க கட்டணம் நிர்ணயித்து டிக்கெட் வழங்கினர். தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்து, சீசன் டிக்கெட் வழங்கப்பட்டது. 30 நாட்கள் நடைபெறும் அகில இந்திய கால் பந்தாட்ட போட்டியில் நாடெங்கிலும் உள்ள சிறந்த விளையாட்டு குழுக்களை விளையாட செய்த பெருமையும் ஜிம்கானா மைதானத்துக்கு உண்டு.இந்த மைதானத்தில் விளையாடிய வீரர்களுக்கு ஐ.சி.எப்., - ஹெச்.எம்.டி., பெமல், ஹெச்.ஏ.எல்.,- ஐ.டி.ஐ., - கே.இ.பி., - டி.என்.இ.பி., பஞ்சாப் போலீஸ் என பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளித்தனர்.கடந்த 1980ல் தொழிலாளர்களின் நன்கொடையில், விளையாட்டு மைதானம் ஸ்டேடியமாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கு அம்பேத்கர் ஸ்டேடியம் என்றும் பெயரிடப்பட்டது.தங்கச்சுரங்க நுாற்றாண்டு விழா இந்த ஸ்டேடியத்தில் தான் கொண்டாடப்பட்டது. பிரதமராக இருந்த இந்திரா பங்கேற்று, தொழிலாளர் உழைப்பில் உற்பத்தி செய்த செங்கல் அளவிலான தங்க கட்டியை காட்டி பாராட்டினார்.இந்த மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சியில், தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாஆகியோரும், அதன் பிறகு நடந்த கலை விழாவில் நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதனின் மெல்லிசை கச்சேரி, குன்னக்குடி வைத்தியநாதன் குழுவினரின் வயலின் கச்சேரி, என பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.இத்தகைய பெருமைக்குரிய ஜிம்கானா மைதானம் பாழடைந்து, சீரழிந்து கிடப்பது பழம்பெரும் விளையாட்டு வீரர்களை, விளையாட்டு ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கிறது. தங்கச்சுரங்கம் மூடப்பட்ட பிறகு, தங்கச் சுரங்க பகுதியில் உள்ள வரலாற்று சின்னங்கள் மெல்ல அழிந்து வருகின்றன. இந்த வரிசையில் ஜிம்கானா மைதானமும் ஒன்று. இதை சீரமைத்து, விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என இப்பகுதி இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை