காற்று வேகம் நாளை குறையும்
புதுடில்லி:மணிக்கு 20- முதல் 30 கி.மீ., வேகத்தில் நேற்று நாள் முழுதும் காற்று வீசியது. வெப்பநிலை அதிகபட்சமாக 25 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இயல்பை விட 2.4 டிகிரி குறைவு. குறைந்தபட்ச வெப்பநிலை 11.8 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. வடமேற்கு திசையில் இருந்து இன்று பலத்த காற்று வீசும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், வேகம் மணிக்கு 14- முதல் 18 கி.மீ., இருக்கும் என கூறியுள்ளது. அதேநேரத்தில், நாளை முதல் காற்றின் வேகம் குறையத் துவங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரக்குறியீடு 119ஆக பதிவாகி மிதமான நிலையில் இருந்தது.