மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
மும்பை : மஹாராஷ்டிராவில், கணவன் - மனைவி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது, அதி வேகமாக வந்த பி.எம்.டபிள்யு., கார் மோதியதில், மனைவி உயிரிழந்தார். காரில் இருந்து தப்பி ஓடிய சிவசேனா பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பையைச் சேர்ந்த பிரதீப் நகாவா - காவேரி தம்பதி, நேற்று காலை, இருசக்கர வாகனத்தில் சசூன் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்கச் சென்றனர். மீன் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் பிரதீப் - காவேரி வீடு திரும்பினர். கோலிவாடா என்ற பகுதியில் சென்ற போது, எதிரே வேகமாக வந்த பி.எம்.டபிள்யு., கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதையறிந்த பிரதீப், இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பினார். எனினும், காவேரி மீது கார் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் அதிலிருந்த நபர், சம்பவ இடத்தில்இருந்து தப்பினர்.இது குறித்து மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார், பால்கர் பகுதியைச் சேர்ந்த சிவசேனா பிரமுகர் ராஜேஷ் ஷாவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.இதன்படி ராஜேஷ் ஷாவை கைது செய்த போலீசார், சம்பவத்தின் போது காரை ஓட்டிய டிரைவரையும், காரில் இருந்து தப்பி ஓடிய அவரது மகன் மிஹிர் ஷாவையும் கைது செய்தனர். உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஆதித்யா தாக்கரே, பாதிக்கப்பட்ட பிரதீப் நகாவாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், “இதை அரசியலாக்க விரும்பவில்லை. டிரைவர் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்,” என்றார்.இச்சம்பவம் குறித்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். இது குறித்து, போலீஸ் கமிஷனரிடம் பேசினேன். ''குற்றம் சாட்டப்பட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்,” என்றார்.
2 hour(s) ago | 9
7 hour(s) ago
7 hour(s) ago