| ADDED : மே 29, 2024 05:02 AM
மாரத்தஹள்ளி, : கார் மோதியதில் பூ வியாபாரம் செய்த பெண் உயிரிழந்தார். காரை ஓட்டிய ஹெச்.ஏ.எல்., அதிகாரி கைது செய்யப்பட்டார்.பெங்களூரு, மாரத்தஹள்ளி போர்வெல் சந்திப்பில் நேற்று காலை ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்த தறிகெட்டு ஓடியது. சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியது. துாக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். அவர் மீது மோதிய காரிலேயே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.ஹெச்.ஏ.எல்., போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண் ரத்னம்மா, 47, என்றும், பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. காரை ஓட்டி வந்த ஹெச்.ஏ.எல்., அதிகாரி கினி, 45, என்பவர் கைது செய்யப்பட்டார்.