உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுகாதி பண்டிகை: மாதேஸ்வரன் கோவிலில் குவிந்த தமிழக - கர்நாடக பக்தர்கள்

யுகாதி பண்டிகை: மாதேஸ்வரன் கோவிலில் குவிந்த தமிழக - கர்நாடக பக்தர்கள்

சாம்ராஜ்நகர்: யுகாதி பண்டிகையை ஒட்டி மாதேஸ்வரன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில், ஏராளமான தமிழக - கர்நாடக பக்தர்கள் பங்கேற்றனர்.சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த வகையில், இந்தாண்டு கடந்த 6ம் தேதி, சிறப்பு பூஜைகளுடன் திருவிழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.கன்னட புத்தாண்டு தினமான நேற்று தேரோட்டத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. சாலுார் மடத்தின் சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள் முன்னிலையில், காலை 7:30 மணி முதல், 9:30 மணிக்குள் சுப முகூர்த்தத்தில் தேரை வடம் பிடித்து ஏராளமான பக்தர்கள் இழுத்தனர்.திருவீதிகளில் உலா வந்த தேரோட்டத்தை, கர்நாடகாவில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தேரின் மீது மலர்கள், பழங்கள், நவ தானியங்கள் துாவி பக்தர்கள் வழிபட்டனர்.பின்னர், பேடகம்பண பழங்குடியினரின் மரபுப்படி நேற்று பூஜைகள் செய்யப்பட்டன. அச்சமுதாயத்தின் 101 பெண்கள், வெல்லத்தில் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.பின், மாதேஸ்வரன் சுவாமி உற்சவ மூர்த்தி, கோவிலின் யானை மண்டபத்தில் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி