உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டில் இருந்த காரில் 52 கிலோ தங்கம்; ரூ.10 கோடி: வெலவெலத்த போபால் போலீஸ்!

காட்டில் இருந்த காரில் 52 கிலோ தங்கம்; ரூ.10 கோடி: வெலவெலத்த போபால் போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: போபால் அருகே வனப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரில், 52 கிலோ தங்கக்கட்டிகள், 10 கோடி ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு; மெண்டேரி வனப்பகுதி வழியாக தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, 30 வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வர சந்தேகம் கொண்ட போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். நீண்ட நேரமாக அதில் இருந்து யாரும் இறங்கி வராததால் சந்தேகம் கொண்ட போலீசார், காரை சோதனையிட்டனர். அவர்களின் சோதனையில் காரினுள் யாரும் இல்லாதது தெரிய வந்தது. உடனடியாக, காரை சோதனையிட்டனர். உள்ளே ஏதேனும் ஆயுதங்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்த அவர்களின் கைகளில் சிக்கியது 2 பெரிய பைகள் மட்டுமே. அவற்றை பிரித்து பார்த்த போது போலீசாருக்கு மயக்கம் வராத குறைதான். 2 சாக்குப்பைகளிலும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், தங்கக்கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த பைகளில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 கிலோ தங்கக்கட்டிகள், 10 கோடி ரூபாய் இருப்பதை கண்டனர். ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அந்த கார் குவாலியரைச் சேர்ந்த சேத்தன் கவுர், முன்னாள் கான்ஸ்டபிள் சவுரவ் சர்மா ஆகியோருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர். இதில் சவுரவ் சர்மா மீதும், ஏராளமான கட்டுமான நிறுவனத்தினர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் கண்டுபிடித்தனர். ஆனால் இந்த பணமும், தங்கக்கட்டிகளும் எப்படி வந்தது, காருடன் அனைத்தையும் காட்டில் கொண்டு வந்து நிறுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, சவுரவ் சர்மா வீட்டில் சில நாட்கள் முன்பு லோக்ஆயுக்தா போலீசார் ரெய்டு நடத்தி ஒரு கோடி ரொக்கம், அரைகிலோ தங்கம், வைரம், வெள்ளிக் கட்டிகள், சொத்து பத்திரங்களை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சாண்டில்யன்
டிச 21, 2024 23:07

கொள்ளையர்களை தப்ப விட்டதுக்கு என்ன கிடைத்ததோ ஆளும் கட்சியில் சேர்ந்திருப்பாங்க அதான்


Sampath Kumar
டிச 21, 2024 14:11

நல்ல விசாரணை செய்து பாருங்க அப்புடியே ஷாக் ஆகிடுவீங்க அம்புட்டும் பிஜேபி மந்திரி ஒரு வரின் பணமென்று தெரிய வரும்


அப்பாவி
டிச 20, 2024 20:32

திருட்டு திராவிட மாடல் அங்கே பரவுதா இல்லே திருட்டு ஆரிய மாடல் இங்கே பரவுதான்னு பட்டிமன்றமே நடத்தலாம்.


SANKAR
டிச 20, 2024 23:20

aariya model size eppavume perisu.inga sundeli anga peruchaali !


வாய்மையே வெல்லும்
டிச 21, 2024 07:10

அட அப்பாவிக்கு வாயில சக்கரை தான் போடணும் எல்லா திருட்டு விஷயத்திலும் சாஹிபு இல்லாம வேலைக்குஆகாது. இதை சொன்ன .. அவர் கண்டிப்பா ஒத்து கொள்ளமாட்டார் வெளியே நடமாடமுடியாது .. சங்கத்தினர் சங்கருத்துக்கு விடுவார் என குளிர் ஜுரம் போல . அநேகர் இவர்களின் கைங்கரியம் தான் மாபியா தங்கக்கடத்தல். ஆரிய கடத்தல் என்பது உங்களிடையே மடைமாற்று பிதற்றல் தேவையற்ற உருட்டு


சாண்டில்யன்
டிச 20, 2024 20:16

இந்திய திருநாடு முன்னெப்போதுமில்லாத வகையில் கொள்ளையடிக்கப் படுகிறதென்று தெளிவாக தெரிகின்றது மொத்தம் நாற்பத்தேழுகோடி பதுக்கி வைக்கப் பட்டுள்ளது இதை அந்த மாநில போலீஸ் எப்படி கையாள்கிறதென்று பார்க்கலாம்...


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 20, 2024 20:07

அந்த காரை எங்கள் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தால் ரொம்ப பத்திரமாக பாதுகாத்து இருப்பேன்.


நிக்கோல்தாம்சன்
டிச 20, 2024 20:07

அடேய் அடேய் , இது எனக்கு கிடைக்காது...கிடைக்காது ...


Rpalni
டிச 20, 2024 20:01

கட்டுக் குடும்ப உறுப்பினர்களும் ஒட்டுண்ணிகளையும் சோதனையிட்டு பாரத தேசத்தின் கடனை ஒட்டுமொத்தமாக அடைத்து விடலாம்


சாண்டில்யன்
டிச 21, 2024 23:04

அந்த தேர்தல் நிதி பத்திர வசூல் என்னாச்சு? பாரத தேசத்தின் நாற்பது லக்ஷம் கோடி கடனையும் ஒட்டுமொத்தமாக அடைத்து விடலாம் ஸ்விஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் சொன்னபடி கொண்டு வந்துட்டாரா மோடி? உனக்கு ஏதாவது கிடைத்ததோ? ஆதாயமில்லாமலா இப்படி கருத்து போடுவாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை