உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளத்தில் கவிழ்ந்த காய்கறி லாரி கர்நாடகாவில் 10 பேர் பரிதாப பலி

பள்ளத்தில் கவிழ்ந்த காய்கறி லாரி கர்நாடகாவில் 10 பேர் பரிதாப பலி

உத்தர கன்னடா, கர்நாடகாவில் காய்கறிகள், பழங்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்ததில், அதில் பயணித்த வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், சவனுாரைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் 25 பேர், நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய, உத்தர கன்னடா மாவட்டம், கும்டாவுக்கு, மினி லாரியில் கிளம்பினர்.நேற்று அதிகாலை 5:00 மணியளவில், உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடர்ந்த பனி மூட்டம் காரணாக, அவ்வழியாகச் சென்றவர்களுக்கு விபத்து நடந்தது தெரியவில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பின், லாரி கவிழ்ந்திருப்பதை பார்த்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார், கிரேன் வாயிலாக லாரியை அப்புறப்படுத்திய போது, காய்கறி மூட்டைகளின் அடியில் சிக்கி 10 ஆண்கள் உயிரிழந்திருப்பது தெரிந்தது. மேலும் படுகாயம் அடைந்த 15 பேரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.உத்தர கன்னடா எஸ்.பி., நாராயண் கூறுகையில், ''பின்னால் வந்த வாகனத்துக்கு வழிவிட இடதுபக்கம் திரும்பும் போது, சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிய லாரி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில், லாரியில் பயணித்தவர்கள் மீது காய்கறிகள், பழ மூட்டைகள் விழுந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்,'' என்றார்.உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் பலி

ஆந்திராவின் மந்த்ராலயா மடத்திற்கு சொந்தமான கல்லுாரியில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்கள் 13 பேர் நேற்று முன்தினம் இரவு, கர்நாடக மாநிலம், ஹம்பி நரஹரி கோவிலுக்கு ஜீப்பில் கிளம்பினர்.ஜீப்பை டிரைவர் சிவா, 24, ஓட்டினார். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் ராய்ச்சூர், சிந்தனுார் அரகிநமரா கேம்ப் பகுதியில் ஜீப்பின் முன்பக்க டயர் வெடித்து, கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சிவா, ஆர்யவர்தன், 18, சுசீந்திரா, 22, அபிலாஷ், 20 ஆகிய மாணவர்கள் இறந்தனர். 10 மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த இரண்டு விபத்துகளில் உயிரிந்த 14 பேர் குடும்பங்களுக்கும் மாநில முதல்வர் சித்தராமையா, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். 23_DMR_0008, 23_DMR_0009, 23_DMR_0010 உத்தர கன்னடாவில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த லாரி. (அடுத்த படம்) ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. (கடைசி படம்) படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.23_DMR_0011 (பாக்சுக்கான படம்)ராய்ச்சூரில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த கிடக்கும் ஜீப்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !