வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த இரண்டாண்டுகள் என்பது அதிகம்.
சிறப்பு
புதுடில்லி: குருகிராமில் இன்று முதல் 10 நிமிட ஆம்புலன்ஸ் சேவையை பிளிங்கிட் நிறுவனம் தொடங்கியுள்ளது.ஹரியானா மாநிலம் குருகிராமில், அத்தியாவசிய பொருட்கள் சேவையை வழங்கிவரும் பிளிங்கிட் நிறுவனம், புதிதாக 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை என்பதை தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் 2013ம் ஆண்டு டிசம்பர் முதல் குருகிராமில் செயல்பட்டு வருகிறது.இது குறித்து பிளிங்கிட் தலைமை அதிகாரி அல்பிந்தர் திந்த்சா கூறியதாவது:நகர்ப்புற அவசர மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாக, குருகிராமில் இருந்து 10 நிமிடங்களுக்குள் உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட விரைவான-பதில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி உள்ளோம்.முதல் ஐந்து ஆம்புலன்ஸ்கள் இன்று முதல் குருகிராமில் பணியில் ஈடுபடுத்தப்படும். சேவையை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆட்டோமேட்டட் எக்ஸ்டர்னல் டிஃபிபிரிலேட்டர்கள் (ஏஇடிகள்), ஸ்ட்ரெச்சர்கள், மானிட்டர்கள், தேவையான மருத்துவ இயந்திரங்கள் மற்றும் முக்கியமான அவசரகால மருந்துகள், அத்தியாவசிய உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு பயிற்சி பெற்ற துணை மருத்துவர், ஒரு உதவியாளர், ஒரு தகுதிவாய்ந்த ஓட்டுநர் இருப்பர்.லாப நோக்கற்ற மாதிரியில் செயல்படும் இந்த சேவையானது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அல்பிந்தர் திந்த்சா கூறினார்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த இரண்டாண்டுகள் என்பது அதிகம்.
சிறப்பு