உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு

ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் எப் 16, ஜேஎப் 17 ரக விமானங்கள் உள்பட 10 விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.அக்., 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது; ஆப்பரேஷன் சிந்தூர் இந்தாண்டின் சிறந்த கூட்டு ராணுவ நடவடிக்கையாகும். இந்த தாக்குதல் இந்திய விமானப்படையின் வலிமையை வெளிக்காட்டியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 300 கிமீ நுழைந்து சென்று இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். உயர்தர தொழில்நுட்பம் கொண்ட எஸ் 400 ஏவுகணை அமைப்பு தான் முக்கிய பங்கு வகித்தன. இது ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. நாங்கள் இலக்குகளை துல்லியமாக தாக்கினோம். நம் படையினருக்கு குறைந்த பாதிப்புகளே ஏற்பட்டன. ஒரே இரவில் அவர்களை (பாகிஸ்தான்) முழங்காலிடச் செய்தோம். இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படையின் கூட்டு நடவடிக்கையே இந்த வெற்றிக் காரணம். ஆனால், ஆப்பரேஷன் சிந்தூரின் போது தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால், அதற்கு மீடியாக்கள் சரியான பதிலை கொடுத்தனர். ஏனெனில், நம் வீரர்கள் சண்டையிடும்போது பொதுமக்களின் மன உறுதி பாதிக்கப்படக்கூடாது. ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலின்போது, இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் விமானப்படையின் எப் 16, ஜேஎப் 17 ரக விமானங்கள், ஒரு கண்காணிப்பு விமானம் ஆகியவை, வான்வெளியில் பறந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டன.இவை மட்டுமின்றி, பாகிஸ்தான் ரேடார் நிலைகள், கட்டளை மையங்கள், ஓடுபாதைகள், விமான ஹேங்கர்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலின்போது, 4 முதல் 5 விமானங்கள் அழிக்கப்பட்டன. மொத்தம் பாகிஸ்தானுக்குச் சொந்தமான 10 விமானங்கள் வீழ்த்தப்பட்டன, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பிரேம்ஜி
அக் 04, 2025 06:52

இதெல்லாம் யாரு இப்ப கேட்டா? இன்னும் பத்து வருடம் கழித்து பீற்றிக் கொள்ளலாமே! நம் நாட்டில் வெறும் பெருமைக்கு பெரிய தலை முதல் குட்டித்தலைகள் வரை அலைவது சகஜம்!


Nathansamwi
அக் 03, 2025 19:58

இவ்ளோ நாளா... இத சொல்றதுக்கு ?


Rathna
அக் 03, 2025 18:26

பாக்கிஸ்தான் இந்த பிரச்னையை எழுப்பியதால் மீண்டும் அவர் பதில் அளித்து இருக்கிறார். இது தெரியாமல் கூச்சல் போடும் தேச பக்தி இல்லாத கூட்டம் நமது விமானங்கள் 1-2 இரண்டு பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தானில் 12 விமானங்கள் அழிந்து போயுள்ளது. அதில் ஆறு அமெரிக்காவின் F16 விமானங்கள். உலக ஆயுத சந்தையில் அமெரிக்காவிற்கு ஏற்படும் கெட்ட பெயரை மறைக்கவே, இந்தியா பாக்கிஸ்தான் போரை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று ட்ரம்ப் திரும்ப திரும்ப சொல்கிறார். பாகிஸ்தானின் பல விமான நிலையங்கள் இன்னும் பயன்படுத்த முடியாத அளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பெயர் NOTAM. அவற்றை பாக்கிஸ்தான் இன்னும் நீக்கவில்லை.


Senthoora
அக் 03, 2025 17:29

இதை சொல்ல இதனை நாளா, சரி அவன் விமான கடலை மிட்டாய் காசு, உங்க 6 விமானம் விழுந்ததே அது எதனை ஆயிரம் கோடி,


P. SRINIVASAN
அக் 03, 2025 17:16

பத்தோ -இருவதோ... நம்ம சைடு எத்தனை? அதையும் மக்களுக்கு சொல்லுங்களேன்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 03, 2025 16:08

ஏப்ரல் மாசம் நடந்த ஆபரேஷன்ல பாகிஸ்தான் விமானத்தை சுட்டுப்புட்டோம்னு அக்டோபர் மாசத்துல சொல்ல என்ன அவசரம். இன்னும் சாவகாசமா ரெண்டு மூணு வருஷம் கழிச்சு சொல்லலாமே.


விமானி
அக் 03, 2025 15:10

பத்து எண்றதுக்கு இத்தனை நாளாச்சா?


புதிய வீடியோ