உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: சட்டசபையில் நிறைவேற்றம்

மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: சட்டசபையில் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அம்மாநில சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு தரக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதனை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டு, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.இந்நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடந்தது. சட்டசபையின் இரு அவைகளிலும் மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்தார். எதிர்க்கட்சியும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்