உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கந்து வட்டிக்காரர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

கந்து வட்டிக்காரர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பெங்களூரு; ''சட்ட விரோதமாக இயங்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், அதிக வட்டி வசூலிக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் மாற்றப்படும்,'' என கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் அளித்த பேட்டி: அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக இயங்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கும், அதிக வட்டி வசூலிக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கு தண்டனை வழங்க, புதிதாக சட்டம் இயற்ற தேவையில்லை. தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்தாலே, அவர்களின் கொட்டத்தை அடக்கலாம்.தற்போதுள்ள சட்டப்படி, இத்தகையோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். அதில் திருத்தம் செய்து, தண்டனையை 10 ஆண்டுகளாக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும்.வரும் சட்டசபை கூட்டத்தொடரில், அதிக வட்டி வசூலிப்பு தடை (திருத்தம்) மசோதாவை, அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ