உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டில் 53 கோடி வங்கி கணக்கு: பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டம் சாதனை

10 ஆண்டில் 53 கோடி வங்கி கணக்கு: பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டம் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு துவக்கி வைத்த 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின்கீழ் இதுவரை 53 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் ரூ.2.3 லட்சம் கோடி அளவிற்கு பணம் டெபாசிட் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) என்பது, அடிப்படை சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதிச்சேவைகளை உறுதி செய்வதற்கான தேசிய திட்டம். இதுவரை, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் வங்கிக் கணக்கினை துவங்குவதற்கு நல்லதொரு முகாந்திரமாக இத்திட்டம் இருந்து வருகிறது. கடந்த 2014, ஆகஸ்ட் 28ம் தேதி, ஜன் தன் யோஜனா திட்டத்தினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். திட்டம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதுவரை 53 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் சுமார் ரூ.2.3 லட்சம் கோடி அளவிற்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 53 கோடி கணக்குகளில் பெண்கள் மட்டும் 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அடங்கியுள்ளனர்.இதனை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ''ஜன்தன் திட்டம் துவங்கப்பட்டதன் 10ம் ஆண்டு என்பது ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துகள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன்தன் திட்டம் முதன்மையானது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R K Raman
ஆக 28, 2024 13:54

நல்லதைப் பாராட்ட பெரிய மனது வேண்டும்


Tirunelveliகாரன்
ஆக 28, 2024 12:10

விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை, வங்கிக் கணக்கு தொடக்கச்சொல்லி ஆர்வப்படுத்துவது என்னவோ நல்ல விஷயம் தான். ஆனால் மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு சொல்லி பணம் எடுத்தா அது சரிதானா?


R K Raman
ஆக 28, 2024 13:53

பலமுறை விளக்கம் கொடுத்து விட்டார்கள் இந்தக் கணக்குகளுக்கு மினிமம் பாலன்ஸ் அபராதம் கிடையாது... சரியான புரிதல் வேண்டும்


J.Isaac
ஆக 28, 2024 11:47

ஜன்தன் போஜனா என்றால் தமிழில் அர்த்தம் என்ன? 23 லட்சம் கோடி யாருக்கு கடனாக வழங்கப்பட்டது ?


திருட்டு திராவிடன்
ஆக 28, 2024 12:49

ஓ நீ அவனா? ஜன் தன் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?


Hari
ஆக 28, 2024 13:46

He is rs 200 oopis..... With zero knowledge


R K Raman
ஆக 28, 2024 13:53

இவ்வளவு பெரிய முட்டாளா?


கூமூட்டை
ஆக 28, 2024 11:18

வாழ்க வளமுடன் அகண்ட பாரதம் முழுவதும்


புதிய வீடியோ