உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த 1,000 பேர் கைது

குஜராத்தில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த 1,000 பேர் கைது

ஆமதாபாத்: குஜராத்தில் சட்ட விரோதமாக குடியேறி, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த 1,000க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன்படி, ஆமதாபாத், சூரத் நகரங்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக குடியேறிய, 1,000க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவரை கைது செய்தனர். இது குறித்து, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி நேற்று கூறியதாவது: சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தவரை பிடிப்பதில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. ஆமதாபாதில், 890 பேரும்; சூரத்தில் 134 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குஜராத்துக்கு வரும் முன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்க, மேற்கு வங்கத்தில் இருந்து பெறப்பட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி உள்ளனர்.இந்த போலி ஆவணங்களை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட நபர்களில் பலர் போதைப்பொருள் விற்பனையாளர்கள், மனித கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.இருவர், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின், 'ஸ்லீப்பர் செல்'லாக பணியாற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட வங்கதேசத்தவர், விரைவில் நாடு கடத்தப்படுவர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள், தாங்களாகவே போலீசாரிடம் சரணடைய வேண்டும். இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர். அவர்களுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி, பாகிஸ்தானியர்களை குஜராத்தில் இருந்து வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

mei
ஏப் 27, 2025 09:58

எதிர்கால தீவிரவாதிகள்


Rasheel
ஏப் 27, 2025 09:30

வோட்டு வங்கிக்காக இவர்கள் மேல் நடவடிகை எடுக்காமல் இருப்பது மிக பெரிய தவறு. அனைத்து சட்ட விரோத செயல்களையும் இவர்கள் செய்கிறார்கள். கலவரங்கள் உட்பட.


thehindu
ஏப் 27, 2025 09:11

பயத்தில் உறைந்துபோயுள்ள இந்து மதவாத கும்பல் அப்பாவிகளை குறிவைத்து மக்களை திசை திருப்புகிறது


Varadarajan Nagarajan
ஏப் 27, 2025 08:04

இவர்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர்கள், வசிக்க இடம்கொடுத்தவர்கள் என அனைவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டவிரோதமாக பிழைப்புக்காக இயங்குவதாலும் அவர்களில் பலர் செய்வது சட்டவிரோதச்செயல்கள். நீதிமன்றமும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தலையிடாமல் இருப்பது அவசியம். தமிழகம், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகள் நிறைய இருப்பதாக தகவல். வாக்குவங்கி அரசியலை தாண்டி நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் அந்தந்த மாநில அரசுகளும் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.


shyamnats
ஏப் 27, 2025 07:55

மேற்கு வங்கத்தில் சோதனை செய்தால், பல லட்சம் தேருவார்கள். அதே போல கேரளா மற்றும் தமிழகத்திலும் அடிப்படை, மற்றும் தீவிரமான சோதனை செய்து அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். அரசியல் வாதிகளின் ஆதரவு இவர்களை ஊக்குவிக்கிறது. நாலைந்து மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இவர்கள் பெரிய ஊர்வலமாகவே சென்று ஆர்ப்பாட்டம் செய்தது செய்திகளில் வந்தது.


நிக்கோல்தாம்சன்
ஏப் 27, 2025 05:25

திராவிட நாட்டில் இதனை செய்யும் தகுதி அங்கிருக்கும் முதல்வர்களுக்கு இருக்கா , இல்லை கோர்ட் தானாக முன்வந்து கேட்கவேண்டுமா ?


புதிய வீடியோ