உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்

ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்

புதுடில்லி: இதுவரை இல்லாத வகையில் 2025ம் ஆண்டில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் மாவோயிஸ்ட்டுகள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி பூண்டுள்ளார். மேலும், மாவோயிஸ்ட்கள் சரணடையா விட்டால், ஆயுதங்கள் மூலமாகத் தான் பதிலளிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து, மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, போலீசாரிடம் சரணடைந்து வருகின்றனர். மேலும், சரணடைய மறுக்கும் மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடுவதற்காக, சிறப்பு படைகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,040 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது இதுவரை இல்லாத அளவு எண்ணிக்கையாகும். கடந்த 2020ம் ஆண்டில் 344 பேரும், 2021ல் 544 பேரும், 2022ல் 417 பேரும், 2023ல் 414 பேரும் சரணடைந்துள்ளனர். மத்திய, மாநில படைகளின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக, இது கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டு 881 மாவோயிஸ்ட்டுகளும், 2025ல் 1,040 மாவோயிஸ்ட்டுகளும் சரணடைந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மூத்த மாவோயிஸ்ட்டுகள் சிலர் இந்த வாரத்தில் சரணடைய இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நவ.,1ம் தேதி மாநில தினத்தையொட்டி, பிரதமர் மோடி சத்தீஸ்கர் வருவதற்கு முன்பாக அவர்கள் சரணடைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thravisham
அக் 19, 2025 04:49

அடுத்த டார்கெட் திருட்டு த்ரவிஷ குடும்பமாக இருக்கணும். அதற்கடுத்த டார்கெட் அண்ணாமலையின் ஆட்சியாக இருக்கனும். ஓம் மஹாதேவ்


Ramesh Sargam
அக் 13, 2025 10:39

சரணடைந்தவர்களுக்கு வேலை கொடுத்து, தொழில் கத்து கொடுத்து, தொழில் செய்ய பண உதவி செய்து கொடுத்து நல்வழியில் அவர்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் மீண்டும் அவர்கள் ஆயத்தங்களை எடுத்து முன்பு போல தீவிரவாதிகளாக மாறுவார்கள்.


KavikumarRam
அக் 13, 2025 10:12

தமிழகத்தில் திக கூட்டம், மதமாற்ற என் ஜி ஓ க்கள் இந்த மாதிரி ஒழிக்கப்படவேண்டும்,


கடல் நண்டு
அக் 13, 2025 09:30

அங்கு அவர்களுக்கு புரியும் வகையில் பாடம் புகட்டப்படுகிறது ... இது போன்ற சிகிச்சை தமிழகத்திலுள்ள சில பிரிவினைவாதிகளுக்கு மத்திய சார்பில் கொடுக்கப்பட்டால் தேச பக்தி இன்னும் மேம்படும்.