| ADDED : மே 16, 2025 12:50 PM
திருப்பதி: மே 18ம் தேதி விண்ணில் ஏவ உள்ள 101வது ராக்கெட் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். கடந்த ஜனவரி மாதம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 100வது ராக்கெட்டை, இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. மே 18ம் தேதி விண்ணில் 101வது ராக்கெட்டான, 'பி.எஸ்.எல்.வி., - சி 61' ஏவப்பட உள்ளது. இதன் வாயிலாக, புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yrcd2ubo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மே 18ம் தேதி விண்ணில் ஏவ உள்ள 101வது ராக்கெட் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், ''மே 18ம் தேதி அதிகாலை 5.59 மணிக்கு, இந்தியாவின் 101வது ராக்கெட்டை PSLV-C61 மூலம் ஏவ திட்டமிட்டுள்ளோம். இது 63வது PSLV ஏவுதல் ஆகும்'' என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.