உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

மைசூரு, மைசூரு அருகே, 10ம் வகுப்பு மாணவி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.கர்நாடகாவில் பள்ளி குழந்தைகள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. சாம்ராஜ் நகர் மாவட்டம், பாடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்த, மூன்றாம் வகுப்பு படித்த சிறுமி தேஜஸ்வினி, 8; கடந்த 6ம் தேதி பள்ளியில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, தரகனுார் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மகந்தேஷ், 13; குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், கடந்த 25ம் தேதி உயிரிழந்தார்.மைசூரு, பிரியாபட்டணாவின் கெல்லுாரு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜு - வசந்தா தம்பதியின் மகள் தீபிகா, 15, ராவந்துாரு கர்நாடக பப்ளிக் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். குடியரசு தினமான நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதறி அழுதனர்; இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhaskaran
ஜன 30, 2025 20:58

மிகவும் வருத்தமாக உள்ளது.மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய மத்திய அரசு திட்டம் தீட்ட வேண்டும்.


Chockalingam C
ஜன 30, 2025 18:53

ஆல் ஸ்கூல் ம் காலேஜ் ம் மெடிக்கல் செக் இப் பண்ணனும் இனிமேல் இதுபோல் வராமல் தடுக்கலாம் மே ப்ளீஸ் சார் எல்லோரும் நல்ல இருக்கணும் இறைவா


Bahurudeen Ali Ahamed
ஜன 29, 2025 09:54

மிக வருத்தமளிக்கும் செய்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை