உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்தது சம்பவம் ஒரு விபத்து: சொல்கிறார் கார்கே

பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்தது சம்பவம் ஒரு விபத்து: சொல்கிறார் கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : '' பெங்களூருவில் 11 பேர் உயிரிழக்க காரணமான கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு விபத்து,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 4ம் தேதி ஆர்சிபி அணி வீரர்களை பார்க்க திரண்ட ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என பா.ஜ., கூறியுள்ளது.இது தொடர்பாக கார்கே கூறியதாவது: கும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது யாரேனும் பதவி விலகினார்களா? அது குறித்து நான் அதிகம் பேசவில்லை. அந்நிகழ்வில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். நான் வெளியிட்ட ஒரு அறிக்கைக்காக என்னை அதிகம் விமர்சித்தனர். ஆனால், பல உடல்கள் ஆற்றில் மிதந்து சென்றன.இது மட்டும் அல்லாமல் கோவிட் காலகட்டத்திலும் உ.பி.,யில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு யாரேனும் பொறுப்பு ஏற்றனரா? உள்நோக்கத்துடன் நடந்து இருந்தால் நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால், பெங்களூரு சம்பவம் ஒரு விபத்து. நிச்சயம் இது தவறு தான். இதற்காக எங்கள் கட்சித் தலைவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

கண்ணன்
ஜூன் 12, 2025 11:01

இதே வாய் கும்ப மேளா சம்பவத்தை என்ன சொன்னது? இதில் எது நல்ல வாய்? எனவேதான் முறையான ந்ல் படிப்பறவுள்ளோரைக் கட்சிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்


chinnamanibalan
ஜூன் 11, 2025 21:04

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஏற்படும் சாவுகளுக்கு பெயர் விபத்து, பிஜேபி ஆட்சியில் ஏற்படும் சாவுகளுக்கு அரசே பொறுப்பு. காங்கிரஸ் கட்சி நாட்டில் ஏன் காணாமல் போகும் நிலையில் உள்ளது என்பது இப்போது புரிகிறது


venugopal s
ஜூன் 11, 2025 20:25

கும்பமேளாவின் போது நூறு பேருக்கும் மேல் இறந்தனர். அது விபத்து என்றால் இதுவும் விபத்து தான். மேலும் அதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் உத்தரப்பிரதேச பாஜக அரசு முப்பது பேர் மட்டுமே இறந்தனர் என்று பொய் கணக்கு வேறு சொல்லி மக்களை ஏமாற்றினர்!


vivek
ஜூன் 11, 2025 20:48

சாம்பிராணி வேணுகோபால்...அது வேறு இது வேறு..


muth
ஜூன் 11, 2025 21:16

பிஜேபி பிடிக்கல உங்களுக்கு ... காங்கிரஸ் நல விரும்பி ...


M S RAGHUNATHAN
ஜூன் 11, 2025 21:24

1984 இல் சீக்கிய கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் 10000 to 15000. ஆனால் ராஜீவ் தலைமையில் ஆண்ட காங்கிரஸ் அரசு சொன்னது 2000 சீக்கியர்கள் தான் இறந்தனர். 1984 டிசம்பரில் போபால் யூனியன் கார்பைடு விபத்தில் எத்தனை பேர் இறந்தனர் என்று சரியான விவரம் கிடையாது. அப்போது மத்ய பிரதேசத்தில் ஆட்சி செய்தது காங்கிரசு அரசு. டெல்லியில் ஆட்சியில் இருந்தது ராஜீவ். முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் என்பவரை போபாலில் இருந்து பாதுகாப்புடன் விமானம் மூலம் அனுப்பிவைத்தது காங்கிரஸ் அரசு. அதுவும் அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் இறங்காமல் Defence air field இல் இறங்கியது. அங்கிருந்து மிக பாதுகாப்புடன், ரகசியமாக அவர் டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப் பட்டு அமெரிக்கா அனுப்பப் பட்டார். காங்கிரஸ் இப்போது மோடி டிரம்பிற்கு அடி பணிந்தார் என்றால் 1984 இல் ராஜீவ் அப்போது அமெரிக்க ஜனாதிபதியிடம் அடி பணிந்தார் என்று சொல்லலாமா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 23:52

கும்பமேளாவிற்கு வந்தவர்கள் எண்ணிக்கை 45 கோடி. பெங்களூருவில் அப்படி அல்ல. நமோ அப் பதிலளித்தவர் எண்ணிக்கை 62000 என்றதற்கு 8 கோடியில் 62000 பெரிய எண்ணிக்கை இல்லை என்ற கருத்து வந்திருந்த இருந்தது. அதற்காக தான் மேற்கூறிய எண்ணிக்கை குறிப்பிட்டு இருந்தேன். 11 பேர் இறந்தது விபத்து எனக்கூறி மன்னிப்பு கேட்டுவிட்டால் போதுமா. இறந்தவர்கள் குடும்பத்திற்கு எதை கொண்டு இழப்பீடு தர முடியும். இது தனியார் நிறுவன வெற்றி விழா அந்த கிரிக்கெட் அணி தனியாருக்கு சொந்தமானது. இப்போது அந்த கிரிக்கெட் அணி 17500 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அந்த தனியார் கிரிக்கெட் அணிக்கு இரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பதை காட்டி அதன் விற்பனை விலையை ஏற்றவே இந்த வெற்றி மற்றும் வெற்றி விழா ஏற்பாடுகள். சென்னை அணி எல்லா போட்டிகளிலும் தோற்றதே அந்த பெங்களூர் அணி வெற்றி பெற்று விற்க நடந்த நாடகமே இந்த கிரிக்கெட் போட்டி. 11 பேர் இறந்தது இந்த 17500 கோடிக்கா என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி.


Rathna
ஜூன் 11, 2025 20:13

சில அரசியல்வியாதிகள் பிணத்துடன் அரசியல் செய்வர். கிரிக்கெட் வீரர்கள் பணத்துடன் அரசியல் செய்வர். பல நூறு கோடி சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள், இழந்த குடும்பங்களை நினைத்து ஒரு ரூபயாவது கொடுத்தார்களா?


Ramesh Sargam
ஜூன் 11, 2025 19:30

கும்பமேளாவின் போதுகோடிக்கணக்கான மக்கள் கூடினார்கள். ஆனால் இங்கே ஒரு சில லட்சம் மக்கள்தான். காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனத்தினால் அந்த விபத்து ஏற்பட்டது. அதை ஒப்புக்கொள்ளாமல் கும்ப மேளா விபத்தை பற்றிப்பேசி பெங்களூரு விபத்தை திசை திருப்புகிறாய்.


A1Suresh
ஜூன் 11, 2025 19:07

சென்னை ஏர்ஷோவில் 11 பேர் இறந்தது, பெங்களூரில் 11 பேர் கிரிக்கெட் மைதானத்தில் இறந்தது விபத்துக்கள் என்றால், காஷ்மீர் பஹல்காம் அருகே பைசரன் பள்ளத்தாக்கில் நிகழ்ந்ததும் விபத்து தான்.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 19:01

காங்கி ஏவிவிட்ட ரவுடிகளால் 9000 அப்பாவி சீக்கியர்கள் படுகொலையை சிறிய நில அதிர்வுதான் என்று பிரதமர் ராஜிவ் கூறியது நினைவுக்கு வருகிறது. எப்போதுமே தனக்கு வந்தாதான் ரத்தமோ?


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 18:58

ராஜிவ் மரணம் ஒரு துன்பியல் நிகழ்வு மட்டுமேன்னு பிரபாகரன் கூறிய போது எப்படியிருந்தது? இறந்தது காங்கிரஸ் ஓனர் குடும்பத்தவர்களில்லையே என்பதால் எளிதாகபேசுகிறீர்கள்?


Padmasridharan
ஜூன் 11, 2025 18:57

மன்னிப்பு கேட்டு லட்சங்கள் கொடுத்தால் போன உயிர்கள் திரும்ப வந்துவிடுமா. . பேசுகின்ற அரசியல்வாதிகளும், ஆடின கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும் இது நடந்தால் இப்படித்தான் பேசுவார்களா. மக்களுக்காக அரசியல்வாதிகளா அல்லது வாய் பேச்சில் ஒருவரை ஒருவர் கோடிக்கணக்கில் வசைபாடிக்கொண்டிருக்க அரசியலா


Kasimani Baskaran
ஜூன் 11, 2025 18:55

கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்பாட்டாளர்கள் ஏன் முயலவில்லை? காவல்துறை என்ன செய்தது? மோசமான நிர்வாகம் - வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை