உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா சனி கோவிலில் 114 முஸ்லிம் ஊழியர்கள் நீக்கம்

மஹாராஷ்டிரா சனி கோவிலில் 114 முஸ்லிம் ஊழியர்கள் நீக்கம்

மும்பை : மஹாராஷ்டிராவின் சனி சிங்னாப்பூர் கோவில் அறக்கட்டளையில் வேலை பார்த்த 114 முஸ்லிம்கள் உட்பட, 167 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள அஹில்யா நகர் மாவட்டத்தின் சிங்னாப்பூர் கிராமத்தில் பிரபலமான சனி பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலை சனி சிங்னாப்பூர் கோவில் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.இந்த கோவிலில் 114 முஸ்லிம்கள் உட்பட ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் ஊழியர்கள் கோவிலில் பணியாற்றுவதை எதிர்த்து சமீபத்தில் ஹிந்து அமைப்புகள் இந்த கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டன. அவ்வாறு நீக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தப்போவதாக கூறியிருந்தன.இந்நிலையில், கோவிலில் துப்புரவு பணி, தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் 114 முஸ்லிம்கள் உட்பட 167 பணியாளர்களை கோவில் அறக்கட்டளை அதிரடியாக பணி நீக்கம் செய்து நேற்று அறிவித்தது. பணி விதிமுறைகளை மீறியதாகவும், ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என கூறியும் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganapathy Subramanian
ஜூன் 18, 2025 14:49

யாரோ காசு வாங்கிக்கொண்டு செய்த தவறுக்கு இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர்களை வேலையில் இருந்து நீக்கியது தவறு. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மற்ற கிருத்துவ அல்லது இஸ்லாமிய மத தொடர்பான துறைகளுக்கு இடமாற்றம் செய்து இருக்க வேண்டும்.


Ramesh Trichy
ஜூன் 18, 2025 10:20

Yes, but they should have been given an native job opportunity, provided they have done their job without any issues.


Ramesh Sargam
ஜூன் 16, 2025 12:45

சபாஷ், சரியான செயல். இதேபோன்று நாடுமுழுவதும் உள்ள ஹிந்து கோவில்களில் பணியாற்றும் வேற்று மதத்தவர்களையும் பணியிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை