உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்சியை நிர்ணயித்த 1.18 லட்சம் ஓட்டுகள்

ஆட்சியை நிர்ணயித்த 1.18 லட்சம் ஓட்டுகள்

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜ., 48ல் வென்று ஆட்சியை தக்க வைத்தது. காங்., 37ல் வென்றது. பா.ஜ., 55,48,800 ஓட்டுகளும், காங்., 54,30,602 ஓட்டுகளும் பெற்றன. 1,18,198 ஓட்டுகளில் காங், ஆட்சியை இழந்தது.

மாறிய கொண்டாட்டம்!

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய உடன், காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. இதையடுத்து, சண்டிகர் உட்பட முக்கிய நகரங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் கூடினர். மேளங்கள் முழங்கி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.ஓட்டு எண்ணிக்கை துவங்கி இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், நிலைமை தலைகீழாக மாறியது. பா.ஜ., முன்னிலை பெறத் துவங்கியது. இதையடுத்து, காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. பா.ஜ., அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் துவங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M.COM.N.K.K.
அக் 09, 2024 10:08

மக்கள் திலகம் தொடச்சியாக மூன்றுமுறை வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்ந்து அவர் மரையும்வரை அவரே தமிழக முதல்வர் இது தெரியாமல் கமெண்ட் செய்வது கூடாது


பாலா
அக் 09, 2024 13:52

உங்க மக்கள் திலகம் ஜெயித்தார் புரட்சி தலைவி ஜெயித்தார் அப்போது, அ.தி.மு.க அல்ல?. ஆனால் இது பி.ஜே.பி யின் வெற்றி.


RAAJ68
அக் 09, 2024 09:21

பெரிய வித்தியாசம் இல்லை. அப்படி இருந்தும் எதற்கு இவ்வளவு அலப்பறை செய்கிறது BJP? ஏன்னவோ அல்லா இடங்களிலும் வெற்றி பெற்று விட்டது போல ஓவராக குதிக்கிறார்களே இது அதிகப்படியாக தெரியவில்லயா


Rajan
அக் 09, 2024 06:37

வடக்கனுக்கும் புத்தி தெளிவாகி விட்டது. தெற்கில் தொலைந்தே போய்விட்டது


Suresh Palanisamy
அக் 09, 2024 06:29

3 வது முறை தொடர்ந்து ஆட்சி என்பது பெரும் சாதனை, நம்ம ஊருல 1 முறை ஆட்சி செய்தாலே விரட்டி அடிக்கப்படும் அளவுக்கு உள்ளது அரசியல் கட்சி. பாஜக ?????????


raja
அக் 09, 2024 08:12

அதிமுக மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மும்முறை தமிழகத்தை தொடர்ந்து ஆண்டவர்.. புரட்சி தலைவி இருமுறை தமிழகத்தை ஆண்டார்... வரலாறை நன்கு தெரிந்து கொள்ளவும்...


Kasimani Baskaran
அக் 09, 2024 05:24

காங்கிரஸ் தோற்றால் அது இவிஎம் பிரச்சினை. ஜெயித்தால் இவிஎம் நன்றாக வேலை செய்தது. ஆக சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததாக சொல்லித்திரியும் இ காங்கிரஸ் கட்சியும் தீம்காவும் ஒரு விஷயத்தில் ஒத்துப்போகிறார்கள் என்றால் அது இவிஎம் தான்.


சமீபத்திய செய்தி