உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 12 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 12 நக்சல்கள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கரில் நக்சல்கள் நடமாட்டம் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினருக்கும், நக்சல் இடையே அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது. கடந்த 12ம் தேதி பிஜாப்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இன்று(ஜன.,16) பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் ஐஇடி வகை வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.இந்நிலையில், இன்று காலை தெற்கு பிஜாப்பூர் வனப்பகுதியில் ,மாவட்ட வன பாதுகாப்பு படையினர், அதிவிரைவுப்படையினர் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இணைந்து நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதல் மாலை வரை நீடித்தது. இதில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, அங்கு மோதல் நீடித்து வருவதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜன 16, 2025 23:48

இந்தியா முழுக்க நக்சலைட்களை ராணுவத்தை விட்டு ஒழிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.


Venkataraman
ஜன 16, 2025 20:57

நக்சல்களை விட மோசமான குற்றவாளிகள், கொள்ளையர்கள் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.?


Barakat Ali
ஜன 16, 2025 20:27

தமிழக அர்பன் நக்ஸல்களை எப்போ வேட்டையாடுவீங்க ????


புதிய வீடியோ