உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் 6 நாளில் 12 பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்

மஹா.,வில் 6 நாளில் 12 பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் பிரதமர் மோடி வரும் 8 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை 12 பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ.,20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இங்கு ஆட்சியை தக்க வைப்பதற்காக பா.ஜ., மும்முரமாக உள்ளது. இதற்காக அக்கட்சி, தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நவ.,08 முதல் 14 வரை பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.62 தொகுதிகள் கொண்ட விதர்பா பகுதியிலும்,46 தொகுதிகளை கொண்ட மரத்வாடா பகுதியிலும் 72 தொகுதிகளை உள்ள மாநிலத்தின் மேற்கு தொகுதியிலும் பிரதமரின் பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன. இந்தக் கூட்டங்களில் மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை பட்டியலிட உள்ள பிரதமர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sampath Kumar
நவ 06, 2024 11:06

சூறாவளி பயணம் ஒரு கேடா


C.SRIRAM
நவ 06, 2024 11:22

உங்களுக்கு என்ன பிரச்சனை ?


Mario
நவ 06, 2024 09:09

இதெல்லாம் சரி, மணிப்பூர் எப்ப போறீங்க


Ahamed Rafiq
நவ 06, 2024 03:09

மதிற்பிற்குரிய பிரதமர் மோடி ஜி அவர்கள் மத்தியில் மிக அருமையாக ஆட்சி செய்து கொண்டுருக்கிறார் என் வாழ்த்துகள். அஹமட்


அப்பாவி
நவ 05, 2024 22:48

அரசு செலவிலே அஞ்சடுக்கு பாதுகாப்புன்னு மக்களை அடிச்சு முடக்குவாங்க. சொந்தக் காசிலே போகச் சொல்லுங்க.


hari
நவ 06, 2024 10:33

ஏல ப்பாஞ்சு லட்ச அப்பாவி, உன் ஊரு லோக்கல் கவுன்சிலர் கூட சொந்த காசை போட மாட்டான் நீ டாஸ்மாக் போகாம இருந்தா உன் அறிவு தெளிவா இருக்கும்


Oviya Vijay
நவ 05, 2024 22:25

தமிழ்நாட்டுல இவர வெச்சு எத்தனை ரோடு ஷோ நடத்தியும் ரிசல்ட் என்ன ஆச்சு... ஒரு வடையும் இங்க போணி ஆகலையே... அதே தான் அங்கேயும் நடக்கப்போகுது...


புதிய வீடியோ