உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் அலுவலக குறைதீர் இணையதளத்தில் 12 ஆயிரம் புகார்கள் நிலுவை

பிரதமர் அலுவலக குறைதீர் இணையதளத்தில் 12 ஆயிரம் புகார்கள் நிலுவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் அலுவலக இணையதளத்தில் 12 ஆயிரம் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் பொதுமக்கள் அளிக்கும் குறைகள், புகார்கள் www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ஜிநே்திராசிங் லோக்சபாவில் கூறியது, பிரதமர் அலுவலக இணையதளத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் 80 ஆயிரத்து 513 புகார்கள் பதிவாகியுள்ளன.இதில் 58 ஆயிரத்து 612 புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 34 ஆயிரத்து 659 புகார்கள் கடந்தாண்டு பெறப்பட்டவை. மீதம் 12,758 புகார்கள் பிரதமர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளன. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜூலை 25, 2024 08:14

நான் குடுத்த ஒரு புகாருக்கு தீர்வுன்னு ஒண்ணும் வரலை. கேஸ் க்ளொஸ்டு ந்னு போட்டு சுபம் போட்டாங்க. PMGRAMS நு வெட்டியா பேரு வேற.


Indian
ஜூலை 25, 2024 03:03

பன்னிரண்டு லக்ஹசம் புகார்கள் நிலுவையில் இருக்கும்


sundarsvpr
ஜூலை 24, 2024 20:07

ஒரு சிறு அரசு அலுவலகத்தில் குறைந்தது இருபது அல்லது முப்பது பெட்டிஷன்கள் நிலுவையில் இருக்கலாம். பிரதமர் அலுவலகத்தில் 12 ஆயிரம் நிலுவை என்பது விவாதத்திற்கு உரியது அற்றது.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 24, 2024 19:43

////58 ஆயிரத்து 612 புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது-/// அனுப்பிதான் வச்சிருக்கீங்க.... அப்புகார்களுக்கான தீர்வோ, நடவடிக்கையோ எடுக்கல... இல்லையா...?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ