வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போலி மற்றும் அசல் சாமியார்களை எப்படி கண்டுபிடித்தார்களென்று குறிப்பிடுங்கள் அய்யா...
டேராடூன்: உத்தராகண்டில் இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், 127 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.கங்கையாற்றில் இருந்து புனித நீரை எடுத்து சென்று சிவன்கோவில்களில் அபிஷேகம் செய்யும் கன்வர் யாத்திரை, கடந்த 11ம் தேதி துவங்கியுள்ளது. இதையொட்டி உத்தராகண்ட் மாநிலத்தில் 'ஆப்பரேஷன் கலனேமி' என்ற பெயரில் போலி சாமியார்களை பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு கடந்த இரு நாட்களில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 127 போலி சாமியார்கள் சிக்கியுள்ளதாக, உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.டேராடூன் மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் 61 போலி சாமியார்கள் கைதாகியுள்ளனர். இதில் ரிஷிகேஷில் மட்டும் 17 பேர் சிக்கினர். டேராடூனில் கடந்த 11ல் 23 போலி சாமியார்களும், நேற்று முன்தினம் 38 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் உத்தம்சிங் நகரில் 66 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலி மற்றும் அசல் சாமியார்களை எப்படி கண்டுபிடித்தார்களென்று குறிப்பிடுங்கள் அய்யா...