உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 134 பேர் சிக்கினர்

டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 134 பேர் சிக்கினர்

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 134 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை நாடு கடத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.டில்லியில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக டில்லியின் பல இடங்களில் சோதனை நடத்தி வங்கதேசத்தவர்களை கைது செய்துள்ளனர். அவர்களை நாடு கடத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல், இன்றும் டில்லியின் தெற்கு பகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகள் மற்றும் சந்தேகப்படும் பகுதிகள் என 14 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில், சந்தேகத்துக்கு உள்ளான நபர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்று்ம் ஆதார் அட்டைகளை வாங்கி சோதனை செய்தனர். அப்போது, சட்டவிரோதமாக தங்கியிருந்த 138 வங்கதேசத்தவர்கள் பிடிபட்டனர். அவர்களில் 38 பேர் பெண்கள் மற்றும் 43 பேர் குழந்தைகள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்கள், நாடு கடத்தும் பணியில் அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

lana
ஜூன் 12, 2025 12:27

எங்க borgery வால் வாழ்வில் மண்ணை அள்ளி போடும் இந்த செயலை வன்முறை யாக கண்டிக்கத்தக்கது. beevi வழியில் செல்கின்றனர். என்னை கேட்டால் இந்த ration card வழங்கும் பொறுப்பு சில ஆண்டுகளுக்கு மத்திய அரசு செய்ய வேண்டும். இது தான் fraud documents இன் முதல் படி


VENKATASUBRAMANIAN
ஜூன் 12, 2025 07:36

இங்கே தமிழ்நாட்டில் வந்து பாருங்கள். நிறைய பேர் சிக்குவார்கள்


c.k.sundar rao
ஜூன் 12, 2025 00:21

Kick them out of our country mercilessly.


Shankar
ஜூன் 11, 2025 22:42

இவர்களுக்கு இத்தனை காலமாக அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு என்ன தண்டனை?


venugopal s
ஜூன் 12, 2025 15:49

எல்லைப் பகுதியை ஒழுங்காக பாதுகாக்க துப்பில்லாமல் உள்ளே வர விட்டவர்களுக்குத் தான் முதலில் தண்டனை கொடுக்க வேண்டும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை