உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவீன வசதிகளுடன் 136 வந்தே பாரத் ரயில்கள்!

நவீன வசதிகளுடன் 136 வந்தே பாரத் ரயில்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் 136 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், இயக்கப்பட்டு வருவதாக, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்லியில் தெரிவித்தார்.பல்வேறு கட்சிகளை சேர்ந்த 9 எம்.பி.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1bcq9hfr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நவ.,21ம் தேதி கணக்குப்படி, நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளுக்கான நவீன வசதிகள், தானியங்கி ரயில் பாதுகாப்பு கவசம் 'கவாச்', முழுவதும் அடைக்கப்பட்ட கேங்வே, தானியங்கி கதவுகள், சுகமான பயண அனுபவம், மினி பேன்ட்ரி, பாட்டில் கூலர், டீப் ப்ரீஸர், சுடு தண்ணீர் வைக்கும் கலன் ஆகிய வசதிகள் உள்ளன.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

jayvee
நவ 29, 2024 17:15

ரயில்வே துறை சாதாரண ஏழை ஜனங்களும் பயன்படுத்தும் துறையாக இருக்க வேண்டும்.. நேற்று கரூர் சென்னை மங்களூர் எஸ்பிரஸில் சாதாரண முன்பதிவு WL என்று காண்பித்தது. தட்கலில் இரண்டாவது வகுப்பு இல்லை .. பிரீமியம் தட்கலில் மட்டுமே டிக்கெட் கிடைத்தது.. ரயிலில் எறியபிறகு கண்ட காட்சி .. கிட்டத்தட்ட 30% இருக்கைகள் சென்னை வரை காலியாகவே இருந்தது.. ஏன் 420 வேலை ?


Rameshkumar
நவ 29, 2024 11:05

காசு சம்பாதிக்கணும் சும்மா இருக்க கூடாது


சண்முகம்
நவ 29, 2024 09:48

அழுக்கு நீர் தேங்கி அசுத்தமான கழிப்பறைகளில் நுழையக்கூட முடியவில்லை. இது தான் வந்தே பாரத்தின் நவீன வசதி!


அப்புசாமி
நவ 29, 2024 06:15

பட்டி தொட்டியெல்லாம் பயன் பெறுது. ஒரே நேசன். ஒரே டிரெயின். துட்டு இருந்தா போங்க. இல்லேன்னா நடந்து போங்க.


PathyUSA
நவ 29, 2024 00:51

Pamara makkalum sadarana makkalum mattume India illai. Naduthara makkalum maale thattu makkalum adigam payanikkirargal aagave avargalukkaana rayil vande baharat rayil


கிஜன்
நவ 28, 2024 22:07

ஒரு பாலம் ஒழுங்கா கட்ட துப்பில்லை ... இதுல 136 ரயில்கள் ...


A.C.VALLIAPPAN
டிச 20, 2024 11:42

kijan very poor understanding there is no knowledge .


Ramesh Sargam
நவ 28, 2024 20:05

வசதிகள் ஓகே அமைச்சரே. ஆனால் பல வந்தே பாரத் ரயில்களில் கழிவறைகள் சுத்தமாக இருப்பதில்லை. குப்பை போடும் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. சிப்பந்திகள் அதிகம் இருந்தும் யாரும் அவற்றை அகற்றி சுத்தம் செய்வதில்லை. இதுபோன்ற அவலங்களை நீங்கள் சரிசெய்யவேண்டும் அமைச்சரே. இந்த பணிவான கோரிக்கையை அதில் பயணம் செய்யும் எல்லா பயணிகள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


Narayanan Muthu
நவ 28, 2024 19:38

இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிக்க சாதாரண மக்களால் முடியாதபோது இதனால் பாமர மக்களுக்கு என்ன பயன்.


தமிழ்வேள்
நவ 28, 2024 20:06

பஸ்ஸில் மூன்று மடங்கு கட்டணம் செலுத்தி பயணிக்க முடியும்..இத்துப் போன சினிமாவை 2000 ரூபாய்க்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்க முடியும்.. அநியாய விலையில் சாராயம் வாங்கி குடிக்க முடியும்..ஸ்விக்கி சொமேட்டோ ஆன்லைன் சூதாட்டத்தில் காசு தொலைக்க முடியும்.. இந்த மாதிரியான சாதாரண பாமர பயல்களுக்கு வந்தே பாரத் டிக்கெட் கட்டணம் அதிகமா? ஆம்னி பஸ் கொள்ளைக்கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வந்தேபாரத் கட்டணம்... 200 ஓவா அறிவாலய கூலிக்கு எதையும் தெரிந்து கொள்ளாமல் கமெண்ட் போட கூடாது நாராயணா...


hari
நவ 28, 2024 20:41

நாராயணா. வந்தே பாரத் ட்ரெயின் எல்லாம் ஃபுல் புக்கிங்......அழுவாதே


S.Martin Manoj
நவ 28, 2024 23:36

ஆம்னி பேருந்து போக வழியில்லதவர்கள் தான் அரசு பேருந்திலும் ரயிலிலும் போகிறார்கள் சாதாரண ரயில் கட்டணத்தைவிட வந்தேபாரத்தில் இரண்டு மடங்கு கட்டணம் அதிகம்,ஏழைகள் இதை பயன்படுத்த இயலாது.


Gopalakrishnan Balasubramanian
நவ 28, 2024 18:30

சீட்டில் மட்டும் சிறிது extra குஷன் இருந்திருக்கலாம்


தமிழன்
நவ 28, 2024 18:29

150 ரயில்கள் வந்தவுடன் அதை தனியாருக்கு ஒப்படைத்து விடுங்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக ரயில்வே துறை தனியார் வசம் ஆகிவிடும்...போதுமா?


vadivelu
நவ 28, 2024 19:28

உங்க வாழ்நாளில் நடக்காது.


Rameshkumar
நவ 29, 2024 11:08

வெலய சரியா செய்யாம அரசு வேலை இருந்த போதுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை